Tuesday, January 6, 2009

எங்க ஊரு யாழ்ப்பாணம்!



எங்க ஊரு யாழ்ப்பாணம் - நாங்கள்
நாளும் போவதற்காய் ஏங்குமிடம்
CDMA PHONE இனிலே - நாங்கள்
சிரித்துத் தினமும் கதைக்குமிடம்!

கத்தரிக்காயோ யானைவிலை - அங்கே
உருளைக் கிழங்கைக் கண்ணில் காணவில்லை
கத்தரித் தோட்டத்துக் கமக்காரன் - கொழும்பில்
காலூன்றி விட்டதால் வந்த வினை!

EXPO AIR உம் DIALOG உம் - நன்றாய்
ஏற்றம் காணும் ஒரே இடம்
COVERAGE இல்லா ஊரினிலே - மக்கள்
கதைப்பார் IDD CALL இனிலே!

வெளிநாட்டு நாணயத்தில் வைப்பிருக்கும் - அவர்கள்
வீட்டினிலே இரண்டு SUPER CUP இருக்கும்
பெற்றோல் இல்லாக் காலத்திலும் - யாழ்
பெருந் தெருக்களில் அவற்றின் உலா இருக்கும்!

சங்கக் கடைகளில் கியூ இருக்கும் - மாலை
சந்திச் சுவற்றில் சிறு குழு இருக்கும்
நம்மவர் கடைகளில் பதுக்கலிலே - நாட்டின்
சொத்து மதிப்பிற்குச் சரக்கிருக்கும்!

உதட்டில் புன்னகை மலர்ந்திருக்கும் - இவர்கள்
உள்ளத்தில் வேதனை உறைந்திருக்கும்
எதையும் தாங்கும் உரமிருக்கும் - விலை
ஏற்றத்தால் வயிறுதான் வடிந்திருக்கும்!

EXPO வின் வாசலில் தவமிருப்பார் - PLANE
ஏறிய பின்புதான் மனம் திறப்பார்
எல்லாமே இருந்தது யாழினிலே - இப்போ
எறும்புதான் ஊருதப் பாரினிலே!

3 comments:

Anonymous said...

Engal Uur Yaalpaanam.... Enga Uuru is not our slang... We have a unique slang... Its awkward if we mix with other slangs.. Just a suggestion..

Sinthu on January 27, 2009 at 4:24 PM said...

உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா. நானும் ஒரு யாழ்ப்பானத்தவள் என்ற வகையில் சொல்கிறேன். எங்கள் நிலை எப்போது இப்படியே தான் இருந்து விடுமோ என்ற ஏக்கத்துடன்....

Kiruthigan on October 7, 2010 at 9:00 PM said...

Supper Boss..!!!

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy