Saturday, February 28, 2009

Sorryயும், மன்னிப்பும்





Sorry ற்கும், மன்னிப்பிற்கும் அகராதியில் ஒரே கருத்துத்தான் என்றாலும், அவற்றின் பயன்பாட்டில் இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் மலையிற்கும் மடுவிற்கும் இடையிலானது போலத்தான். தொட்டதுக்கும் Sorry கேக்கிற ரொம்பப்பேர் மன்னிப்பு எங்கிறத பாவிக்க மாட்டாங்க. அதேபோல சிறிய தவறுகளுக்கு Sorry எதிர்பாக்கிறவங்க, கொஞ்சம் பெரிய தவறுகள் என்றால் மன்னிப்பு எண்டு தமிழ்ழ சொல்லவேணும் எண்டு எதிர்பாப்பாங்க. அதோட Sorry சொல்லுறவங்களும் மன்னிப்புக் கேக்கப் பின்னிப்பாங்க. சில தமிழ்ப் படங்கள்ள கூட Sorry சொன்னால் ‘ தமிழ், தமிழ்… மன்னிப்பு’ எண்ட வசனத்தைக் காணலாம். இதனாலயோ என்னவோ, தடைமுறை வாழ்க்கையிலயும் மன்னிப்பு எண்டுறது கொஞ்சம்/ ரொம்பவே மரியாதைக் குறைவாப் பாக்கப்படுது.


இதுக்கு அடிப்படைக் காரணமா நான் நினைக்கிறது என்னண்ணா ஆங்கில மொழி பாவிக்கிறது கொஞ்சம் மரியாதையா நினைக்கிறதுதான். அதோட இன்னுமொரு முக்கியமான காரணமும் இருக்கு. அது ஆங்கில மொழியில அடிப்படையா இருக்கிற மரியாதைத் தன்மைதான். ஆங்கிலத்துல கெட்ட வார்த்தைகள் இருக்கிறதுதான். எங்கள்ள ரொம்பப்பேர் அதுகள மட்டும்தான் தெரிஞ்சு வச்சிட்டு வார்த்தைக்கு வார்த்தை யூஸ் பண்ணிட்டுத் திரியிறாங்கதான். ஆங்கிலப் படங்கள் சிலதிலயும் அடிக்கடி பாவிக்கப்படுதுதான். ஆனா இது எல்லாத்தயும் தாண்டி ஆங்கிலத்தில ஒரு மரியாதையான அடிப்படை இருக்கு.

சாதாரணமா பேசுற ஆங்கிலத்தில கூட மரியாதை கலந்திருக்கும். எங்கட ‘வாடா’ விற்கும், ‘வாங்கோ’ விற்கும் இடையில இருக்கிற வித்தியாசம் ஆங்கிலத்தில கிடையாது. “Come” மட்டும்தான். அதோட எங்கட தமிழ் மொழியில நாங்க அதிகாரம் செலுத்துற மாதிரியான ஒரு பேச்சு முறையைப் பாவிப்பம். ஆனா ஆங்கிலத்துல அடுத்தவரிடம் பணிந்து கேட்கிறது போலத்தான் பேசுவாங்கள். அதோட அவங்கள் தொழில் முறையால வாற ஏற்ற இறக்கங்களப் பாக்க மாட்டாங்க. ஆசிரியரைக்கூட மாணவர்கள் மரியாதைக் குறிகளோட சேர்த்துப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். அவர்கள் வெறும் உதட்டளவு மரியாதையை எதிர்பார்ப்பதில்லை.

அப்படியே அவங்க தாங்க விடுற சின்னத் தவறா இருந்தாலும் சரி, இல்லை பெரிய தவறா இருந்தாலும் சரி, Sorry சொல்லிடுவாங்க. அவங்க அப்படிப் பாவிக்கிறதால Sorry எண்டுற வார்த்தை எங்கட மனசுல ஒரு சாதாரணமான வார்த்தையாப் பதிஞ்சுபொச்சு. ஆனா, நாங்க தமிழ்ழ மன்னிப்புங்கிற வார்த்தைய அவ்வளவாப் பாவிக்கிறதில்லை. அதோட எங்கட பழக்கமுறை தேவையில்லாத மரியாதைகளையெல்லாம் எதிர்பார்க்கிற ஒன்று. அதனால சாதாரணமாப் பேசுறப்ப கூட அதை எதிர்பாக்குற பழக்கம் இருக்கும். அதனாலதான் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படுது.

செய்த தவறுக்கு எந்த மொழியில வருத்தம் தெரிவிச்சாத்தான் என்ன? வெள்ளைக்காரன்ட நடை, உடை, கலாச்சாரம் எல்லாத்தயும் கண்ணை மூடிட்டுக் கொப்பி அடிக்கிற நாங்க, அவங்க பேச்சில இருக்கிற நல்ல விசயங்களையும் கொஞ்சம் எடுத்துக்கலாமே!!!

4 comments:

Anonymous said...

Sorry ,இந்த Blog'ல என்ன சொல்ல வரிங்க என்று புரியல

Subankan on March 5, 2009 at 12:40 PM said...

உங்களுக்கு புரியும்படியாக எழுதாததற்கு என்னை மன்னிக்கவும்.

Sinthu on March 13, 2009 at 6:21 PM said...

அடடா பின்னூட்டலிலும் அந்த மன்னிப்பு, sorry தொடர்கிறதா..நண்பர்களிடையே நன்றி - thanks/ thank you, மன்னிப்பு - sorry எல்லாம் பார்க்கக் கூடாது என்பார்களே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Subankan on March 14, 2009 at 9:51 AM said...

உண்மையான நட்புக்குள் அதைப்ப‍ற்றிச் சிந்திக்க‍வே தேவை இருக்காது

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy