Wednesday, April 8, 2009

வரப்போகும் 3D (முப்பரிமாண) இணையத்தளம்!





Google street viewer அல்லது Google earth இல் அனுபவமுள்ளவங்களுக்குத் தெரியும். அதில் ஒரு முப்பரிமாணத் தன்மை காணப்படும். ஏன்? பிளாக்கரின் சில Gadgets கூட முப்பரிமாண அசைவுகளைக்கொண்டு அமைந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவைதான் அடுத்த தலைமுறை இணையத்தின் ஆரம்பங்கள்.


Google street viewer இல் ஒரு காட்சி


Google street viewer இல் தெரிகின்ற முப்பரிமானப் படங்கள் 360 பாகை கிடைத்தளத்திலும், 270 பாகை நிலைக்குத்துத் தளத்திலும் திரும்பக்கூடியவை. இதன் அடுத்த கட்டம்தான் இந்த முப்பரிமாண இணையம். முப்பரிமாண இணையப்பக்கத்தை அமைக்கும் முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

இந்த முப்பரிமாண இணையத்தில் நாங்கள் சாதாரணமாக நடந்து செல்லும்போது கண்களுக்குத் தெரிவதைப்போல உருவங்கள் இருக்கும். அந்த உணர்வு எமக்கு ஏற்படும். உதாரணமாக ஒரு online shopping system இனை எடுத்துக் கொண்டோமானால், இந்த முப்பரிமாண இணையத்தில் நாம் login ஆனதும் நாம் கடைக்குள் நுழைவது போலவும், அங்குள்ள பொருட்களை கடையில் நேரடியாகப் பொருட்களை எவ்வாறு எடுக்கிறோமோ அப்படியே எடுப்பது போலவும் இருக்கும் (பார்க்க படம்).



ஆனால் இது அவ்வளவு சுலபமல்ல. நாம் இந்த முப்பரிமாண இனையத்தில் வலம்வர அதற்கான தலைக்கவசம், கண்ணாடி, கையுறை, சப்பாத்து என்பன தேவை. ஆனால் காலப்போக்கில் அவை இல்லாது போனாலும் அச்சரியமில்லை.

இணையத்தால் உருவாக்கப்படும் இந்த மாய உலகம் (Virtual world) பற்றி அதிகம் பேசப்படும் இந் நிலையில், இணையத்தில் கட்டி எழுப்பப்படும் இந்த முப்பரிமாண உலகம் அதன் பாதிப்புக்களை மேலும் அதிகமாக்கியே விடப்போகின்றது. ஆனால் அதைப்பற்றிச் சிந்திப்பார் எவருமில்லர்.

சுருக்கமாகச் சொன்னால் இணையத்தில் இன்னுமொரு உலகைக் கட்டியெழுப்பும் முயற்சி இது. ஆனால் அது அவ்வளவு இலகுவாக இருந்துவிடப் போவதுமில்லை, எதிர்காலச் சந்ததிக்கு இது நல்லதுமில்லை.

அப்படியே Blog Templates முப்பரிமாணத்தில் கிடைக்குமா என்று யாராவது கேட்டு சொல்லுங்கப்பா


5 comments:

Suresh on April 8, 2009 at 8:33 PM said...

நல்ல :-) உபயோகமான பதிவு சுபா

சுபானு on April 9, 2009 at 7:37 AM said...

நல்ல தகவல்.. வாழ்த்துக்கள் :)
//அப்படியே Blog Templates முப்பரிமாணத்தில் கிடைக்குமா

எதிர்காலத்தில் கிடைக்கும்.. காத்திருங்கள்..

கோவி.கண்ணன் on April 9, 2009 at 8:19 AM said...

//சுருக்கமாகச் சொன்னால் இணையத்தில் இன்னுமொரு உலகைக் கட்டியெழுப்பும் முயற்சி இது. ஆனால் அது அவ்வளவு இலகுவாக இருந்துவிடப் போவதுமில்லை, எதிர்காலச் சந்ததிக்கு இது நல்லதுமில்லை.
//

முப்பறிமாண படங்கள் முதலில் ஆர்வமாகப் பார்க்கப் பட்டாலும் பிறகு அவ்வளவாக எடுபடவில்லை, இணையத்தளத்தில் எந்த அளவு வரவேற்புக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது

கடைக்குட்டி on April 10, 2009 at 9:15 AM said...

ரொம்ப புதுசா இருக்கு தகவல்

அன்புடன் அருணா on April 19, 2009 at 1:40 PM said...

WOW!!!! great news!!!
anbudan aruna

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy