Friday, April 17, 2009

தொடருமா ரயில்பயண சுவாரஸ்யங்கள்???






யானை, கடற்கரை, ரயில் மூன்றையும் பார்க்கப் பார்க்க சலிக்காது, பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பார்கள். ரயிலைப் பார்ப்பது மட்டுமல்ல, அதில் பயணம் செய்வதும் இனிமைதான். கணத்திற்குக் கணம் மாறும் காட்சிகளும், பக்கத்து சீட்டு வறுவல்களும், என்றும் மறக்க முடியாதவை. யன்னலினூடும், மிதி பலகையிலில் நின்றுகொண்டும் தலையை நீட்ட ஜில் என்று தழுவிச்செல்லும் காற்றும், எதிரில் வரும் ரயிலைக் கண்டதும் ‘விருட்’ என்று தலையை உள்ளே இழுக்கும் கண நேரத்துப் பயமும், ரயிலின் தாலாட்டும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை.


இன்று விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. எல்லாவற்றிலும் அவசரம் தேவை மனிதனுக்கு. ரயிலிலும் மாற்றங்கள். மின்சார ரயில், மிதக்கும் ரயில், அதிவேக ரயில் பறக்கும் ரயில், பாயும் ரயில் என்று எதையெதையோ கண்டுபிடித்துவிட்டான். மாற்றம் ஒன்றுதான் உலகில் மாற்றமே இல்லாதது. கால மாற்றத்தில் பழையன கழிதலும், புதியன புகுதலும் சாதாரணமானது, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. ஆனால் கழிந்துபோகும் இவை மனிதனின் மனிதத் தன்மையையே மாற்றி, அவனை இயந்திரத்தைப்போல அல்லவா ஆக்கிவிடுகின்றது?


இன்றய சீறிப்பாயும் ரயில்களின் வேகத்திற்கு யன்னலினூடு தெரிவது வேறும் உருவக் கீற்றுக்கள்தான். யன்னல் என்பதும் வெறும் பெயருக்குத்தான். முழுவதும் மூடப்பட்டுக் கண்ணாடி இடைவெளி ஆங்காங்கே விடப்பட்டிருந்தால் அதுதான் யன்னல். ஏதோ விமானத்தில் பயணிப்பது போலவே இருக்கிறது அது. ஜில் என்ற காற்று A.C துவாரத்தினூடுதான் வருகின்றது. Laptop உடன் மூழ்கிவிடும் பக்கத்துசீட்டின் முகம்கூட ஞாபகம் இருக்காது பலருக்கு இறங்கும்போது. மிதிபலகையை அண்டவிடாத தானியங்கிக் கதவுகள் பாதுகாப்புத்தான் என்றாலும் சிறைச்சாலை போன்ற உணர்வுதான். என்னைப் பொறுத்தவரை இந்த அதிவேக ரயில்கள் வேகமாக எடுத்துச் செல்வது மனிதர்களை மட்டுமல்ல, அவர்களின் சின்னச்சின்ன சந்தோசங்களையும்தான்.


7 comments:

Suresh on April 17, 2009 at 3:51 PM said...

சுபா ஆஹா அருமையாய் ....

Suresh on April 17, 2009 at 3:52 PM said...

//யன்னல் என்பதும் வெறும் பெயருக்குத்தான். முழுவதும் மூடப்பட்டுக் கண்ணாடி இடைவெளி ஆங்காங்கே /

//தானியங்கிக் கதவுகள் பாதுகாப்புத்தான் என்றாலும் சிறைச்சாலை போன்ற உணர்வுதான். என்னைப் பொறுத்தவரை இந்த அதிவேக ரயில்கள் வேகமாக எடுத்துச் செல்வது மனிதர்களை மட்டுமல்ல, அவர்களின் சின்னச்சின்ன சந்தோசங்களையும்தான்./

அரும்யாய் சொன்ன சிறைச்சாலை என்ற வார்த்தை :-) சூப்பர்

அதில்லும்

// வேகமாக எடுத்துச் செல்வது மனிதர்களை மட்டுமல்ல, அவர்களின் சின்னச்சின்ன சந்தோசங்களையும்தான்//

100/100 உணமை நல்ல ரசிப்பு உனக்கு

Subankan on April 17, 2009 at 3:54 PM said...

@ Suresh

மிக்க நன்றி அண்ணா

மங்களூர் சிவா on April 19, 2009 at 11:17 AM said...

/
யானை, கடற்கரை, ரயில் மூன்றையும் பார்க்கப் பார்க்க சலிக்காது,
/

only this three??

நாங்கல்லாம் ஞாயித்துகெழமையானா எதாவது ஒரு ஷாப்பிங் மால் போய் சலிக்காம ஃபிகர்தான் பாப்போம்

:))))))))))

Subankan on April 19, 2009 at 11:22 AM said...

@ மங்களூர் சிவா

ஆகா! எனக்கு இது தோணாமப் போச்சே!!

:)

அன்புடன் அருணா on April 19, 2009 at 3:10 PM said...

//இந்த அதிவேக ரயில்கள் வேகமாக எடுத்துச் செல்வது மனிதர்களை மட்டுமல்ல, அவர்களின் சின்னச்சின்ன சந்தோசங்களையும்தான்//

உணர்ந்து பார்த்த உண்மைகள்!!!
அன்புடன் அருணா

Sinthu on April 21, 2009 at 10:12 PM said...

நீங்க சொன்னதில் நியாயம் இருக்கிறது சுபாங்கன் அண்ணா..

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy