Saturday, April 18, 2009

உலகின் முதலாவது குளோனிங் ஒட்டகம்!


 உலகின் முதலாவது குளோனிங் ஒட்டகத்தை துபாயைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்தப் பெண் ஒட்டகத்திற்கு இன்ஜாஸ் எனப் பெயரிட்டுள்ளனர். இன்ஜாஸ் என்றால் சாதனை என அர்த்தமாம். அத்துடன் இது இறந்துபோன ஒரு ஒட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட கலத்திலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பது மேலும் சிறப்பாகும். இவ்வளவு காலமும் தாயிலிருந்து எடுக்கப்பட்ட கலமே குளோனிங்கிற்குப் பயன்பட்டது.
தாயுடன்(?) இன்ஜாஸ்

இதை நான் முதன்முதல் அறிந்தபோது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. குளோனிங் இஸ்லாத்திற்கு முரணானது என்று எங்கேயோ படித்த ஞாபகம். ஆனால் இஸ்லாமிய நாடான துபாயில் இது எவ்வாறு சாத்தியமானது? இது குறித்து நான் இணையத்தில் தேடியபோது அங்கே அவர்கள் இதைத் தெளிவுபடுத்தியிருந்தார்கள். அதாவது இந்தக் குளோனிங்கால் எந்த விலங்கையும் கொடுமைப்படுத்தவில்லை. அத்துடன் இறந்துபோன ஒட்டகத்தைப்போலவே இன்னுமொரு ஒட்டகம் உருவாகப்போகிறது. உயிருடன் இருப்பதைப்போலல்ல. மூன்றாவதாக குளோனிங் ஒட்டகம் உண்மையான ஒட்டகத்தைவிட சிறப்பான எந்த ஒரு இயல்பையும் கொண்டிருக்கப்போவதில்லை. எனவே இது இஸ்லாத்திற்கு விரோதமானதல்ல எனச் சொல்கிறார்கள்.





ஆனால் மனிதனை குளேனிங்கில் உருவாக்குவது இஸ்லாத்திற்கு முரணானதாகச் சொல்கிறார்கள். ஏனெனில் இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மனிதனிற்கும் தனித்துவம் இருக்கும். குளோனிங் அதை மாற்றிவிடும். இதனால் சமனிலை குழம்பும். அத்துடன் ஆண் – பெண் சமனிலையும் குழம்பிவிடும். அத்துடன் புதிய உயிருக்கான ஆண் – பெண் தேவையை இது இல்லாமல் செய்துவிடும். ஆனால் என்னைப்பொறுத்தவரை இவை மிருகங்களிற்கும் பொதுவானவை. இருக்க மனிதனிற்கு மட்டும் கூறப்படுவது ஏன் எனப் புரியவில்லை. இஸ்லாமிய நண்பர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது. மற்ற மதங்களின் குளோனிங்கைப்பற்றிய நிலைப்பாடு தேடியும் கிடைக்கவில்லை.





சரி, என்றாவது ஒருநாள் குளோனிங் மனிதன் உருவாகப்போவது நிச்சயம். அவனது அடையாளங்கள் எப்படி இருக்கப்போகிறது? தனக்கென சுயமாக அடையாளத்தை உருவாக்கிக்கொள்வானா? இல்லை, குளொனிங்கால் பெற்ற அடையாளங்களோடு வாழ்வானா? தாய் தந்தை என அவனுக்கு எவ்வாறு வரையறுப்பது? அவனை எவ்வாறு வித்தியாசப்படுத்தி அடையாளப்படுத்துவது? இதனால் உலகின் ஆண் – பெண் சமனிலையும், தொழில் சமனிலையும் பாதிக்கப்படாதா? இருக்கும் சனத்தொகைப்பெருக்கத்திற்கு இதன் அவசியம் என்ன? இதனால் மனிதன் முழுவதுமாக இயந்திரமாக மாறமாட்டானா? எனக்குத் தெரியவில்லை. யாராவது பின்னூட்டத்தில் தெழிவுபடுத்துங்களேன்.

12 comments:

Kanags on April 19, 2009 at 5:18 AM said...

தகவலுக்கு நன்றி. குளோனிங் என்ற படியெடுப்பு பற்றி தமிழில் அறிய விக்கிப்பீடியா கட்டுரையைப் பாருங்கள்:
குளோனிங்

Suresh on April 19, 2009 at 7:11 AM said...

குளோனிங் ஆடு தெரியும் ஒட்டகமுமா அருமையான அறிவு பகிர்தல் சுபா தொடருங்கள்

Subankan on April 19, 2009 at 7:56 AM said...

@ Kanags

நன்றி, இந்தப் பதிவெழுத முதலே இதைப் படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Subankan on April 19, 2009 at 7:57 AM said...

@ Suresh

நன்றி அண்ணா

மங்களூர் சிவா on April 19, 2009 at 11:14 AM said...

நல்ல தகவல்.

குளோனிங் மனிதன் உருவாகும்போது என்னதான் குளோனிங்காக இருந்தாலும் சந்தர்ப சூழ்நிலைகள் அவன் சுயத்தை மாற்றும். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் வளர்ப்பினிலே
:)

Subankan on April 19, 2009 at 11:19 AM said...

@ மங்களூர் சிவா

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

//எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் வளர்ப்பினிலே//

அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்றுதானே கூறுவார்கள். அந்த அன்னைதான் பிரச்சினையாச்சே குளோனிங்கில்!

தேவன் மாயம் on April 19, 2009 at 1:36 PM said...

குளோனிங் பற்றி நல்ல அலசல்!! அறிவியலின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!!நடப்பது நடக்கட்டும்!!

ஹேமா on April 19, 2009 at 4:38 PM said...

வணக்கம் சுபாங்கன்.உங்கட ஊர்ப் பக்கத்து ஊர்க்காரி நான்.சரியான சந்தோஷம்.சுகம்தானே !ஏனோ பக்கத்து ஊர் எண்டு சொனதும் கண் ஒருக்கா கலங்கிப் போச்சு.இதுதான் உறவின் நிலையோ !

என்னைப் பொறுத்த மட்டில் குளோனிங் மனிதன் குழப்பம்தான்.
விஞ்ஞான வளர்ச்சிகள் எல்லாமே அதியசம்தான்.ஆனால் அபாயமானது.

kumar said...

குளோனிங் மூலம் பல தீர்க்கமுடியாத பரம்பரை நோயில் இருந்து விடுபட சந்தர்ப்பம் உள்ளது.தொற்று நோயில் இருந்தும் பாதுகாத்துகொள்ள வாய்ப்பு இருக்கும் போது நல்லதுதானே.

Subankan on April 19, 2009 at 5:12 PM said...

@ ஹேமா

எனக்கும் வலைத்தளத்தில் உங்கள்து profile ஐ பார்த்தபோது ஏதே ஒரு உணர்வு. அதுதான் அங்கு எனது ஊரையும் குறிப்பிட்டேன். வருகைக்கு நன்றி அக்கா.

//என்னைப் பொறுத்த மட்டில் குளோனிங் மனிதன் குழப்பம்தான்.
விஞ்ஞான வளர்ச்சிகள் எல்லாமே அதியசம்தான்.ஆனால் அபாயமானது.//

உண்மைதான்.

Subankan on April 19, 2009 at 5:13 PM said...

//kumar said...
குளோனிங் மூலம் பல தீர்க்கமுடியாத பரம்பரை நோயில் இருந்து விடுபட சந்தர்ப்பம் உள்ளது.தொற்று நோயில் இருந்தும் பாதுகாத்துகொள்ள வாய்ப்பு இருக்கும் போது நல்லதுதானே//

நல்லதும் கெட்டதும் எல்லாவற்றிலும் கலந்துதானே இருக்கின்றது.

கார்த்தி on April 21, 2009 at 2:06 PM said...

Nice information.....
Continue

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy