Monday, April 20, 2009

பச்சை ??!!!


 
Green. இன்று பல நிறுவனங்கள் தமது பொருட்களை விளம்பரப்படுத்தும்போது பயன்படுத்தும் சொல். மனிதன் தனது எதிர்காலச் சந்ததியைக் குறித்தும் சிந்திக்கத்தொடங்கிவிட்டான் என்பதற்கு அடையாளச் சொல்லாகவும் கருதலாம். பல இடங்களிலே இது பெயரளவில் தான் என்றாலும் இது இருக்கவேண்டும் என்ற நிலைக்கு இன்று வந்துவிட்டது. பல விளம்பரங்களிலும் இது முக்கியமாக இடம்பெறுவதே இது தொடர்பான விழிப்புணர்வுக்குக் ஆதாரம் எனலாம்.

சரி, Green என்றால் என்ன? சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாமல் பொருட்களைத் தயாரிப்பதும், அவற்றைப் பயன்படுத்தும்போது அவை சூழலுக்குப் பாதகமில்லாமல் இருப்பதும், பின் அவற்றை அழிக்கும்போதும் எந்தவொரு பாதகத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதும் ஆகும்.

உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அலுவலகத்தில் கணினியில் வேலை செய்கிறீர்கள். அப்போது அது உலக வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அது அதிக சக்தியை (மின்னை) உறிஞ்சும். பின் அக்கணினி பழையது எனத் தூக்கிக் கடாசும்போதும் அதிலிருந்து வரும் கதிர்வீசல்கள் சூழலைப் பாதிக்கும். அது உங்கள் சந்ததிக்கு மட்டுமல்ல, எதிர்காலச் சந்த்திக்கும் தொல்லை கொடுக்கும்.

இதை உணர்ந்தே பல நிறுவனங்கள் Green தொழில்நுட்பத்தை தாம் பாவிப்பதை முக்கிய விளம்பரமாகக் கூறுகின்றன. Green தொழில்நுட்பத்தில் உருவான உபகரணம் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு ஆக்கப்பட்டிருக்கும். இவை உபயோகத்தின்போது குறைந்த சக்தியையே உறிஞ்சும். இலகுவாக மீழ்சுழற்சி செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இவ்வாறான மின்சாதனங்களில் மட்டுமல்ல, சேவைகள், விளம்பரப்படுத்தல், முகாமைத்துவம் போன்றவற்றிலும் Green நுளைந்துவிட்டது. எந்தவோரு சேவையையும், வேலையையும் சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதகமில்லாமல் செய்வதே இதன் நோக்கமாகும்.

இனிமேல் பொருட்கள் வாங்கும்போதும், ஏதாவது சேவைகள் பெறும்போதும், வேலைகள் செய்யும்போதும் இந்தப் பச்சையையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்களேன்!

10 comments:

சி தயாளன் on April 20, 2009 at 6:07 PM said...

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் தான் இப்போதுள்ள நிலமையும்...ஆனாலும் எம்மால் முயன்ற அளவு பச்சைக்கு ஆதரவு தர வேண்டியது தான் :-)

நிகழ்காலத்தில்... on April 20, 2009 at 6:18 PM said...

அக்கறையான பதிவு...

வாழ்த்துக்கள்..

Suresh on April 20, 2009 at 6:53 PM said...

Very good post, its good to create the awarness

Subankan on April 20, 2009 at 7:19 PM said...

@ ’டொன்’ லீ

//கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் தான் இப்போதுள்ள நிலமையும்...ஆனாலும் எம்மால் முயன்ற அளவு பச்சைக்கு ஆதரவு தர வேண்டியது தான் :-)
//

உண்மைதான். ஆனால் இப்போதும் செய்யாவிட்டால்???

Subankan on April 20, 2009 at 7:20 PM said...

//அறிவே தெய்வம் said...
அக்கறையான பதிவு...

வாழ்த்துக்கள்..//

நன்றி

Subankan on April 20, 2009 at 7:21 PM said...

@ Suresh

நன்றி அண்ணா

சுபானு on April 20, 2009 at 7:56 PM said...

நல்ல ஒரு பதிவு... வாழ்த்துக்கள்..:)

Subankan on April 20, 2009 at 8:18 PM said...

@ சுபானு

நன்றி

Sinthu on April 21, 2009 at 9:43 PM said...

உண்மையாவா.. தெரியாமல் போச்சே...
பச்சை என்றாலோ.. பொறாமை என்பார்களே.. அது பொய்யா...?

Subankan on April 21, 2009 at 10:25 PM said...

@ Sinthu

பச்சை என்றால் பசுமை, இயற்கையின் நிறம். அதில் எங்கே இருக்கிறது பொறாமை?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy