Wednesday, April 29, 2009

Facebookஐத் தமிழில் பயன்படுத்துவது எப்படி?



Facebookஐ
பலர் ஆங்கிலத்திலேயே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் Facebook உலக மொழிகள்
அனேகமானவற்றில் பயன்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. நீங்கள் கேட்பது
எனக்குப் புரிகிறது. Facebookஇன் மொழிமாற்றப் பகுதியில் தமிழைக் காணவில்லை
என்றுதானே? Facebook தமிழில் இப்போதுதான் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே அது தமிழை முழுவதுமாக மொழிமாற்றி முடிக்கும்வரை அங்கே அனுமதிக்காது.
ஆனால் இதுவரை மாற்றப்பட்ட சொற்களைக்கொண்ட தமிழில் Facebook
பயன்படுத்தலாம். அதேபோல் நீங்களும் மொழிமாற்றத்திற்கு உதவலாம். அது
எப்படியா? இப்படித்தான். (படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)





முதல்ல Facebookல login ஆகுங்க. படத்தில காட்டின window open ஆகும். அதில படத்தில 
குறிக்கப்பட்டுள்ள Settings ஐக் கிளிக் பண்ணுங்க.




இந்த window open ஆகும். இதில Language ஐக் கிளிக் பண்ணுங்க.




அடுத்ததா வர்ற Window ல படத்தில காட்டியிருக்கிற மாதிரி Translation Application இணைப்பைக்
கிளிக்கி அடுத்த window க்குப் போங்க.




அது அந்த Application ஐ open செய்வதற்கான அனுமதியைக் கேட்கும். Allow என்ற Button ஐக் 
கி்ளிக்கி உள்ளே போங்க.




படத்தில இருக்கிற மாதிரி அந்த Application தெரி்யும். சிகப்பு வட்டம் போட்டிருக்கிற Combo box
ஐக் கிளிக் பண்ணி அதில தமிழ் இருக்கும், தேடி தெரிவுசெய்யுங்க.




படத்தில இருக்கிற மாதிரி எல்லாம் தமிழ்ல தெரியும். விரும்பினா படத்தில காட்டின
Translate Facebook என்ற இணைப்பைக் கிளிக்கி நீங்களும் facebookஐத் தமிழ்ல மாத்துறதுக்கு
உதவலாம். இல்லையா? முகப்பைக் கிளிக் பண்ணி, முகப்புக்கு வாங்க.



படத்தில காட்டின முகப்பில இருக்கிற மாதிரி எல்லாம் தமிழ்ல வந்திடும். திரும்பவும் 
இங்கிலீசில மாத்த படத்தில வட்டமாக் காட்டியிருக்கிறதைக் கிளிக் பண்ணி மாத்திக்கலாம்.



19 comments:

வழிப்போக்கன் on April 29, 2009 at 5:07 PM said...

me the 1st....
:)))

வழிப்போக்கன் on April 29, 2009 at 5:07 PM said...

தகவலுக்கு ரொம்ப நன்றி...

சி தயாளன் on April 29, 2009 at 5:30 PM said...

உத பற்றி போன வருடம் நானும் பதிவிட்டிருந்தேன்..கிட்டத்தட்ட ஆரம்பித்து வைத்ததே நானும் என் இன்னொரு நண்பரும் தான் (படம் 6 ல் நான் இருக்கிறேன் :-)))..

அப்படியே மற்றவர்களும் இணைந்து கொள்ள கட்டம் 1 ஐ வெற்றிகரமாக கடந்து இப்ப கட்டம் 2ல் நிற்குது....மற்றவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு தேவை குறிப்பாக வாக்களிப்பின் போது..

Raju on April 29, 2009 at 5:35 PM said...

Informative..

Subankan on April 29, 2009 at 5:36 PM said...

@ வழிப்போக்கன்

வருகைக்கு நன்றி

Subankan on April 29, 2009 at 5:37 PM said...

@ ’டொன்’ லீ

உண்மைதான். ஆனால் சில தவறான மொழிபெயர்ப்புகளும் இருக்கின்றன. அவற்றையும் மாற்ற வேண்டும்.

Subankan on April 29, 2009 at 5:37 PM said...

@ டக்ளஸ்.......

thanks

Suresh on April 29, 2009 at 5:45 PM said...

மிக நல்ல பகிர்தல்

Anonymous said...

நல்ல விடயம் ஆனால் . தமிழர்கள் புதியதாக கண்டு பிடிக்க வேண்டும் . அவர்களுடைய முத்திரை பரப்ப வேண்டும் .

Subankan on April 29, 2009 at 6:24 PM said...

@ Suresh

நன்றி

Subankan on April 29, 2009 at 6:26 PM said...

// Anonymous said...

நல்ல விடயம் ஆனால் . தமிழர்கள் புதியதாக கண்டு பிடிக்க வேண்டும் . அவர்களுடைய முத்திரை பரப்ப வேண்டும்//

அதற்குத் தமிழர்கள் தம்மை தமிழர்களாகவே அறிமுகப்படுத்தவேண்டும்.

Sinthu on April 29, 2009 at 8:32 PM said...

Great post anna..
Hw did u find it?

Subankan on April 29, 2009 at 8:36 PM said...

//Sinthu said...
Great post anna..
Hw did u find it?//

எல்லாம் ஒரு முயற்சிதான். ஆமா, கடைசிப் படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் கவனித்தீர்களா?

ARV Loshan on April 30, 2009 at 10:17 AM said...

நல்ல விஷயம் சொன்னீங்க சுபாங்கன்.. மொபைலில் Facebook பயன்படுத்துவோருக்கும் இந்த மொழி வசதி இருக்கா? நானும் முயற்சி செய்தேன் தமிழுக்கு உதவவில்லை..

முனைவர் இரா.குணசீலன் on April 30, 2009 at 11:21 AM said...

தகவல் பயனுள்ளதாக இருந்தது

Subankan on April 30, 2009 at 6:18 PM said...

@ LOSHAN

மொபைல் Facebook இல் வைத்து இவ்வாறு மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் கணினியில் இவ்வாறு தமிழுக்கு மாற்றிவிட்டு பின் மொபைலில் Login செய்தால் தமிழில் தெரியும். ஆனால் அதற்கு உங்கள் மொபைலில் தமிழ் ஒரு மொழியாக இருக்கவேண்டும். அல்லது நீங்கள் தமிழ் மொழி Mobile Browser இனை நிறுவியிருக்கவேண்டும்.

Subankan on April 30, 2009 at 6:19 PM said...

@ முனைவர்.இரா.குணசீலன்

நன்றி.

Sinthu on May 1, 2009 at 12:09 PM said...

"எல்லாம் ஒரு முயற்சிதான். ஆமா, கடைசிப் படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் கவனித்தீர்களா?"
அதப் பாக்காமல் இருப்பமா?

Kamalnath said...

Subankan Facebook ஐ தமிழ் இல் பயன்படுத்தலாம் என்பதை உங்களுக்கு சொல்லித்தந்தது யார் என்பதையும் post பண்ணினால் நன்றாக இருக்கும்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy