Saturday, May 30, 2009

உங்கள் பிளாக்கின் Bookmark ஐகானை மாற்றுவது எப்படி?

16 comments
எனக்குப் பின்னூட்டத்தில் நண்பர் வெங்கிராஜா பிளாக்கின் Bookmark ஐகானை (Favicon) எவ்வாறு மாற்றுவது எனக் கேட்டிருந்தார். பொதுவாக பிளாக்கர் பிளாக்குகளில் பிளாக்கரின் இந்த ஐகானே தெரியும்.

நான் எனது பிளாக்கிற்கு ஐந்தறைப்பெட்டி என்பதைக் குறிக்கும் வகையில் ஐந்தை இட்டுள்ளேன். இதை மாற்றுவது மிகவும் சுலபம்.
முதலில் இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்.



அங்கேயே அவர்கள் 18000இற்கும் மேற்பட்ட அனிமேசன் மற்றும் சாதாரண Faviconகளை தயாரித்து வைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றைப் பாவிக்க விரும்பினால் மேற்கூறிய தளத்திலுள்ள goto the favicon gallery என்ற லிங்கை கிளிக்கி செல்லுங்கள்.


அங்கே உங்களுக்கு பிடித்தமான faviconஇனைத் தெரிந்து அதன் அருகிலுள்ள HTML embed code என்பதைக் கிளிக்கி வரும் Codeஇனை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

இல்லாவிட்டால் உங்களுக்குப் பிடித்தமான படத்தை இட விரும்பினால் அங்கே இலவசமாக உங்கள் பாவனையாளர் கணக்கு ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உருவாக்கிய உங்கள் பாவனையாளர் பக்கத்திலே படத்தில் காட்டிய பகுதியினூடு நீங்கள் விரும்பிய படத்தைத் தெரிவுசெய்து அப்லோட் செய்யுங்கள்.


பின்னர் அதற்கு நீங்கள் விரும்பிய பெயரைத் தெரிவுசெய்து அதை save செய்யுங்கள்.


பின் அந்த Favlcon code இனை படத்தில் காட்டியவாறு கிளிக்கி வரும் நிரலினை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வெட்டி எடுத்துக்கொண்ட நிரலினை உங்கள் பிளாக்கின் Edit Html பகுதிக்குச் சென்று அங்குள்ள /b:skin> என்ற பகுதிக்கும் /head> என்ற பகுதிக்கும் நடுவில் ஒட்டி, Save Template இனைக் கிளிக்குங்கள்.
இப்போது நீங்கள் தெரிவுசெய்த படம் உங்கள் பிளாக்கின் FavIcon ஆக தெரிவதைக் காணலாம்.

Friday, May 29, 2009

உங்கள் ஒவ்வொரு இடுகைக்குமான ஹிட்ஸ்களை தனித்தனியே அறிய…

16 comments


நேற்று ஒரு ஆங்கில பிளாக்கில் ஒவ்வொரு இடுகைகளையும் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என எண்ணிச் சொல்லும் இந்த வசதியைப் பார்த்தேன்.


 அதனைக் கிளிக்கியபோது கிடைத்த JavaScript நிரல்தான் இது. உபயோகமாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் உங்கள் பிளாக்கில்  பின்வருமாறு நிறுவிக்கொள்ளுங்கள்.

தமிழிஷின் ஓட்டுப் பட்டையை நிறுவும் அதே முறையில்தான் இதையும் நிறுவ வேண்டும். முதலில் உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று Layout -ஐ கிளிக் செய்து, Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

பின்பு  data:post.body/> என்ற பகுதியைத் தேடிக் கண்டுபிடிக்கவும்.


அதன் கீழாக இந்த Code இனைச் சேர்க்கவும்.

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>

<div id='hit-counter'>

&lt;a href=&#39;http://csharpdotnetfreak.blogspot.com&#39; rel=&#39;follow&#39;&gt;

<script src='http://blogspot.100webspace.net/pageviews.php' type='text/javascript'/> &lt;/a&gt;


</div></b:if>







பின்பு Save Template என்ற பட்டனை கிளிக் செய்து விட்டால் சரி. அதன் பிறகு உங்களது இடுகைகளின் ஒவ்வொரு பார்வைகளும் எண்ணப்படும். உங்களுக்கும் ஒவ்வொரு இடுகைக்குமான ஹிட்ஸ்களை தனித்தனியே அறிந்துகொள்ளலாம்.

Thursday, May 28, 2009

அதிவேக வசதிகளுடன் Google chrome 2.0

3 comments
எனக்கு ஏன் கூகுல் குறோம் பிடிச்சிருக்கு தெரியுமா? என்னோட நெற் ஸ்பீடுக்கேற்ற தரமான உலவி!

என்ன இது சோப்பு வெளம்பரம் மாதிரு தொடங்கறானேன்னு பாக்கிறீங்களா? உண்மையும் அதுதான். அதிவேக இணைய இணைப்பு பயன்படுத்துபவர்கள் இதனை உணராவிட்டாலும், இன்னும் Dial up connection இல் அல்லாடிக்கொண்டிருப்பவர்களுக்கு இதன் வித்தியாசம் தெரியும். இதில் இணையம் பக்கங்கள் லோட் ஆக எடுக்கும் நேரம் குறைவு.


அதுமட்டுமா?, திறப்பதற்கான கட்டளையை பிறப்பித்த அடுத்த வினாடியே இது திறந்து நிற்கும். காரணம் இதில் Menu bar, Tool bar என்று எந்த bar உம் இல்லை. Bar இருக்கும் ஏனய உலவிகள் Barல இருந்து வர்ற  சரக்கடித்தவன் போல தவழ்ந்து திறந்து வருவதற்குள் குறோமில் இரண்டு பதிவுகள் படித்து முடித்திருக்கலாம். அது மட்டுமா? வெறும் Address bar மட்டும் இருக்கிறதால இணையப்பக்கத்தோட பார்வையிடும் அளவும் அதிகம். இவ்வளவு வசதியும் அதோட Beta verson ல. இப்போ அதோட அடுத்த verson இன்னும் அசரடிக்கிற வசதிகளோட வந்திருக்கு.

இந்த புதிய குறோம் இன்னும் வேகமான உலவுதலுக்கு உதவும். அதோட மட்டுமில்லாமல் இதில் புதிதாக Full screen வசதியும் செஞ்சிருக்காங்க. நீங்க இதில உலவும்போது F11 விசையை அழுத்தி இந்த Full screen வசதியை எடுத்துக்கலாம். இந்த Full screen வசதியில வீடியோ கூடபு பாக்க முடியுமாம். இப்படி Full screen ஆ பாக்கிறப்ப அதில எந்த ஒரு Bookmarks பட்டன்களோ Address bar எதுவும் தெரியாது. திரும்ப F11 அழுத்தி, அல்லது ரைட் கிளிக் பண்ணி திரும்பவும் நார்மல் வின்டோவுக்கு வந்திடலாம்.

அது மட்டுமில்லாம இதில இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செஞ்சிருக்காங்க. இதுக்கு மேல என்னதான் வேணும் ஒரு உலவிக்கு? நெருப்பு நரிக்கு நல்ல போட்டிதான் இது! இங்க போய் இதைத் தரவிறக்கிக்கொள்ளலாம்.

Tuesday, May 26, 2009

பயனுள்ள facebook டிப்ஸ்கள்

6 comments
  •  நெருப்பு உலவியின் side bar இல் facebook chat இனை நிறுவிக்கொள்ள

நெருப்பு உலவியின் சைடு பாரில் facebook chat இனை நிறுவி facebook செல்லாமலேயே chat செய்ய முதலில் உங்கள் நெருப்பு உலவியில் bookmark பகுதியைத் திறந்து அதில் organize bookmark இனைத் தெரியுங்கள்.



அடுத்ததாக கீழே காட்டியுள்ளவாறு நிரல்களை நிரப்புங்கள்
§  Name: Facebook Chat
§  Location: http://www.facebook.com/presence/popout.php

அதிலுள்ள Load this bookmark in sidebar. இனை டிக் செய்யுங்கள்.



அதன்பிறகு நெருப்பு உலவியின் View பகுதிக்குச் சென்று Sidebar இனைத் தெரிந்து அதில் bookmark இனைத் தெரிந்துகொள்ளுங்கள்.



இப்போது facebook chat உங்கள் சைடு பாரில் தயார்!




  • Facebook செல்லாமலேயே உங்கள் Desktop இல் chat செய்ய



இங்கே சென்று Gabtastik  என்ற மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். Facebook செல்லாமலேயே நீங்கள் Chat செய்ய முடியும்.
  • Facebook இல் உங்கள் ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள



இந்த நெருப்பு உலவியின் add-ons உங்கள் Facebook ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள உதவும்.
  • உங்கள் பிளாக்கின் RSS இனை Facebook இல் இணைக்க

Facebook இல் உங்கள் Profile பகுதிக்குச் சென்று அதில் What's on your mind?  என்ற பெட்டிக்குக் கீளே உள்ள Settings இனை கிளிக்குங்கள்


அதில் Blog/Rss இனைத் தெரியுங்கள்.


அதில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை அமுக்குங்கள். இனி உங்கள் பிளாக்கின் இடுகைகள் தானாகவே Facebook இல் தெரியும்.

Saturday, May 23, 2009

பதிவர்கள் கவனம், உங்கள் பிளாக் முடக்கப்படலாம்!!!

26 comments

இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ்ப் பதிவர்களின் பிளாக்குகளில் malware காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது பிளாக்குகள் காணாமல்ப் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழ் பிளாக்குகளில் malware பெரும்பாலும் NTamil திரட்டியின் Vote Button காரணமாகவே வருகின்றது. அது அல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வேறு Java script நிரல்கள் மூலமும் வரலாம். இதனை எனக்குத் தெரிந்து லோசன் அண்ணாதான் முதன்முதல் அறிவித்தார். ஆனால் அதன்பின்னும் பலரது பிளாக்குகளில் இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.


Google Chrome இல் உலவுபவர்களுக்கு இந்த எச்சரிக்கை தெரியும். ஏனய உலவிகள் தாமாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிடுவதால் அவற்றில் உலவுபவர்கள் இதனை உணர்வதில்லை.

Malware என்றால் என்ன? இது malicious Software இலிருந்து பிறந்த பதமாகும். இது ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் கணினி உரிமையாளரின் அனுமதியின்றி, அவருக்குத் தெரியாமலேயே கணினிக்குள் புகுந்து அதனை நாசம் செய்துவிடும். Malware ஆனது கணினி வைரஸ், Worms, trojan horses, Spyware போன்ற அனைத்துத் தீய சக்திகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு மென்பொருள். இது மின்னஞ்சலினூடும், இணையப்பக்கங்களில் ஒளிந்திருந்தும் உங்கள் கணினிக்குள் புகுந்துவிடும். பிறகு அதனுடன் தையா தக்கா ஆடி அதனை அகற்ற பெரும்பாடு படவேண்டும்.


இவ்வாறு Malware காணப்படும் பிளாக்குகளை கூகுல் முடக்கி வருகின்றது. உங்கள் பிளாக் முடக்கப்பட்டால் அதனை மீளப் பெற இயலாது. உங்கள் பதிவுகள், கஸ்டப்பட்டுச் சேர்த்த Followers எல்லாம் வீணாகிவிடும். உங்கள் பிளாக்கில் NTamil vote button நிறுவியிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதனை அகற்றிவிடுங்கள். நீங்கள் நிறுவியிருக்கும் Gadgets கள் வேறு ஏதாவதும் Malware கொண்டிருக்கலாம். எதற்கும் கீழே உள்ள பெட்டியில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை தட்டிப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.






Malware இருப்பதாக தெரிந்தால் உங்கள் பிளாக்கிலுள்ள வேறு தளங்களிலிருந்து பெறப்பட்ட Gadgets ஒவ்வொன்றாக கழற்றி பரிசோதியுங்கள். உங்கள் பிளாக்கைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

Thursday, May 21, 2009

இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கிறீர்களா? Be Careful!

3 comments
 
நீங்கள் இணையத்தில் படங்களை பதிவேற்றம் செய்தபிறகு அதனை மற்றவருடன் பகிர்கிறீர்கள். சில படங்களை அனைவரும் பார்க்கக் கூடியவாறு Public ஆகவும், சிலவற்றை அடுத்தவர் பார்க்க முடியாதவாறு  Personal ஆகவும் சேமிக்கிறீர்கள். சில காலத்திற்குப் பிறகு நீங்கள் அப்படங்களை நீக்கி விடுகின்றீர்கள். ஆனாலும் அப்படங்களை அதன்பிறகும் பார்க்க முடியும் என அதிர்ச்சியளித்திருக்கிறது கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள்.



அவர்கள் இந்த ஆராய்ச்சிக்காக facebook, flickr, picasa உள்ளிட்ட 16 புகைப்படங்கள் பரிமாற்றும் தளங்களைத் தெரிவு செய்தனர். அவற்றில் புகைப்படங்களை Upload செய்துவிட்டு, பின் அவற்றை நீக்கிவிட்டனர். ஆனால் மறக்காமல் ஒவ்வொரு புகைப்படத்தினதும் தனிப்பட்ட நேரடி URL களை எடுத்து வைத்துவிட்டனர். ஏறத்தாள ஒரு மாதத்திற்குப்  பிறகு அந்த URL களை பரீட்சித்துப் பார்த்த போது facebook  உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில் அந்தப் புகைப்படங்கள் தென்பட்டிருக்கின்றன.



flickr, picasa ஆகிய தளங்களில் புகைப்படம் தென்படுவதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாக இருக்கின்றதாம். மற்றும் Microfoft இன் Windows Live Spaces இல் புகைப்படங்கள் தென்படவே இல்லை எனவும் தெரிவித்தனர். நீங்கள் புகைப்படங்களை நீக்கும்போது அவை Server இலிருந்தும் நீக்கப்படாததே இதற்குக் காரணமாம்.



Facebook தனது தளத்தில் இவ்வாறு தென்படுவதை மறுத்துள்ளது. தனது தளத்தில் உடனடியாக Server இலிருந்தும் நீக்கப்பட்டுவிடும் எனவும், மீண்டும் URL கள் Overwrite ஆவதனால் அவ்வாறு வேறு படங்கள் தென்பட்டிருக்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.



சரி தெரிந்தால் தெரிந்துவிட்டுப் போகிறது, நமக்கென்ன என்கிறீர்களா?, நீங்கள் Personal ஆக வைத்திருக்கும் படங்களும், சம்பந்தப்பட்ட ஆல்பம் அழிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு அவற்றின் நேரடி URL களைக் கொண்டு பார்க்க முடிகின்றதாம்.
உங்கள் Personal படங்களை Personal ஆகவே வைத்திருங்கள். அதை இணையத்தில் பகிர்ந்துவிட்டு Personal ஆக வைத்திருக்க முயன்றால் அவ்வளவுதான்.


டிஸ்கி – நான் தொடர்ந்து இவ்வாறான பதிவுகள் எழுதுவதால் சலித்துக்கொண்டவர்களுக்கு; என் மனம் ஒரு நிலையில் இல்லை. சொந்தப் படைப்புகள் வரும் – சில நாட்களில்.

Saturday, May 16, 2009

Sonyக்கு வந்த பரிதாப நிலை

4 comments


 

உலக பொருளாதாரப் பின்னடைவு – அமெரிக்க சனாதிபதித் தேர்தல் சமயத்தில் சக்கை போடு போட்ட விவகாரம். இப்போது அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டேரைத் தவிர யாரும் பேசுவதே கிடையாது.

அமெரிக்காவில் வீடு, நிலங்களின் மதிப்பு உயர்வாயிருந்த காலம். பெரும்பாலானோர் அவற்றிலே முதலிடத் தொடங்க, வங்கிகளும் அவர்களுக்கு கேட்டுக் கேள்வி இல்லாமல் கடனைக் கொடுத்தன. பின் வீடு நிலங்களின் பெறுமதி குறையத்தொடங்கியபோதே பிரச்சினை ஆரம்பமாகியது. கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிக்கொடுக்க முடியாது திணற, அமெரிக்க வங்கிகளும் திவாலாகத் தொடங்கின. இவ்வாறு தொடங்கிய பிரச்சினை பலருடைய வேலையைப் பறித்து, பல நிறுவனங்களை இழுத்து மூட வைத்தது. ஏன்? பெட்டிக் கடைமுதல், பெரிய நிறுவனங்கள்வரை இதன் பாதிப்புக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்தையும் பாதித்தது.

ஆகா, ஓகோ எனப் புகழப்பட்ட IT துறையும், இலத்திரனியல் துறையும் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்தன.  அதன் தாக்கத்தை தமது இலாப(?) நட்டங்களை கூட்டிக் கழித்துப் பார்த்து வெளியிட்டு வருகின்றன அத்துறைகளில் பிஸ்தாவான நிறுவனங்கள்.

உலகின் முன்னணி இலத்திரனியல் நிறுவனமான SONY கடந்த 14 வருடங்களில் தனது முதலாவது வருடாந்த நட்டத்தை அறிவித்துள்ளது. 1.7 பில்லியன்  அமரிக்க டாலர் நட்டத்தை அது அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு அதைவிட அதிக நட்டத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அது தனது எட்டு தொழிற்சாலைகளை மூடப்போவதாகவும், மேலும் எண்ணாயிரம் பேரை வேலையைவிட்டுத் தூக்கப்போவதாகவும் கூறியுள்ளது.

SONY மட்டுமல்ல, Hitachi, NEC Corp ஆகிய இலத்திரனியல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் நிலை இதைவிட மோசம் எனக் கூறப்படுகிறது. Hitachi யின் நட்டம் அதிகமல்ல, வெறும் 7.9 பில்லியன் அமரிக்க டாலர் மட்டுமே. NEC நிறுவனம் 3 பில்லியன் அமரிக்க டாலர் நட்டத்தை பெற்று இரண்டாமிடம் வகிக்கின்றது.

வருகின்ற செய்திகளைப்பார்த்தால் ஒரு ஒபாமா என்ன, ஓராயிரம் ஒபாமா வந்தாலும் உலகத்தைக் காப்பாற்ற முடியாது.

Wednesday, May 13, 2009

பூமியைத் தாண்டியும் வேரூன்றிய Twitter!

6 comments
 
mike massimino, அண்டவெளியிலுள்ள மிகப்பெரிய தொலைநோக்கியில் இருந்து ஆராய்ச்சி செய்துவரும் ஏழு விண்வெளி வீரர்களில் ஒருவர். அங்கிருந்தபடியே இவர் டிவிற்ரவும் தொடங்கிவிட்டார். பூமிக்கு வெளியிலிருந்து டிவிட்டும் முதலாவது நபர் என்ற பெருமையும் பெற்றுவிட்டார். அண்டவெளியில் இருந்துகொண்டு இவர் டிவிற்ர, இவரை Twitterஇல் தொடர்வோரும் கூடிக்கொண்டே செல்கின்றது. இவர் ருவிற்ருவதற்கு நாசா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லையாம். ஏன் தெரியுமா? நாசாவும் கூடத்தானே டிவிட்டுகிறது! இவரோட Twitter அக்கவுண்டை இங்கயும் , நாசாவோடத  இங்கயும் போய்ப் பாருங்க.

அவரது Twitter பக்கம்

எனக்கும் டிவிட்டரில ஒரு அக்கவுண்ட் இருக்கு. ஆனா எனக்கு அதப்பத்தி ஸ்ராட்ல ஒரு மண்ணும் தெரியாது. யாரையாவது பாலோ பண்ணலாம், ஏதாவது எழுதி வைக்கலாம், அடுத்தவங்க எழுதுறத படிக்கலாம். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது. ஆனா Google Twitterஐ வாங்கப்போதாம் என்று தெரிந்ததும் ஏதோ மேட்டர் இருக்குன்னு தேடத்தேட கொஞ்சம் கொஞ்சமா விளங்கத்தொடங்கியது.

பலருக்கு Twitter ஒரு போதையாகவே மாறிவிட்டது. நாள் ஒன்றுக்கு பல நூற்றுக்கணக்கான SMS களை Twitterஇனூடு பரப்புகின்றனர். இதில் அவர்களது விருப்பு, வெறுப்புக்கள் எல்லாம் அடக்கம். இதனால் ஏதாவது ஒரு புதிய விடயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள Twitterஇலும் தேடலாம் என்ற நிலை இப்போதே ஓரளவு வந்துவிட்டது.

Google போன்ற தேடுபொறிகளை விட இது சிறந்தது ஏனென்றால் இதில் வரும் பதில்கள் எல்லாம் எம்மைப்போல சாதாரணமானவர்களின் கூற்றுக்கள். அனுபவ உண்மைகள். எனவே இதில் நம்பகத்தன்மை அதிகம். அத்துடன் நிறுவனங்களும் தமது நிறுவனம் பற்றிய Feed backs களை அறிய Twitterஐ நாடுகின்றன. பல நிறுவனங்கள் Twitter அக்கவுண்ட்களை வைத்து அதன்மூலம் இலவச விளம்பரம் செய்கின்றன. எனவே இப்படி இருசாராரும் சந்திக்கும் களமாக இருக்கும் Twitter எதிர்காலத்தில் இன்னுமொரு Facebook ஆகவோ, இல்லாவிட்டால் நாளாந்த விடயங்களைத் தேடும் ஒரு தேடுபொறியாகவோ வர வாய்ப்பிருக்கிறது.

Googleஇன் புதிய தேடுபொறி அறிமுகம்

7 comments
 
Google நிறுவனம் மிகவும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக்கொண்ட மொபைல்களுக்கான புதிய தேடுபொறி ஒன்றை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தேடுபொறியானது கடந்த 24 மணித்தியாலம், கடந்த வாரம், கடந்த மாதம் எனவும், வீடியோ, ப்ளாக், வெப் எனவும் வேறு முறைகளிலும் தகவல்களைப் பிரித்துப் பட்டியலிடுவதோடு பாவனையாளர் தனக்குத் தேவையானவற்றை வடித்தெடுக்கும் (Filter) வசதியும் கொண்டு அமைந்துள்ளது.  அத்துடன் இவை அனைத்தையும் ஒரே தடவையில் வேகமாகவும் தரவல்லது. இவ் வசதிகள் இவ்வளவு நாளும் கணினியில் தேடுபவர்களுக்கே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் Google squared என்ற பெயருடைய கணினிகளுக்கான புதிய தேடுபொறி ஒன்றும் இந்தமாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது நீங்கள் தேடும் விடயம் சம்பந்தமான வெப் தளங்களைப் பட்டியலிடாமல், நீங்கள் தேடும் விடயத்துக்குப் பொருத்தமான தகவல்களைத் தொகுத்தளிக்கும் வசதியைக் கொண்டிருக்கும்.  

உதாரணமாக Small Dog எனத் தேடினால் படத்தில் உள்ளது போல சிறிய நாய்களைப் பற்றிய தகவல்களை தரும்.

இப்போதே இணையம் என்றால் Google என்றாகிவிட்டது. நான் அடிக்கடி பயன்படுத்தும் தளங்களைக்கூட Googleஇல் தேடி, அதன்பின்னேயே செல்வது வளக்கமாகிவிட்டது. இவ்வளவு ஏன்? எனது ப்ளாக்கிற்கே நான் Googleஇல் தேடித்தான் வருகிறேன். இப்போதே Google அமரிக்காவின் 63 வீதமான இணையச் சந்தையை தன்வசம் வைத்திருக்கிறது.

 இதுவரை Google தனது 365 வகையான தயாரிப்புக்களை பாவனைக்கு விட்டிருக்கிறது. இவற்றில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் 120 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படியே போனால் இணையத்தின் ஏகபோக உரிமையை Google கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

Sunday, May 10, 2009

செல்போன் பாவனையாளர்களே ஒன் நிமிட்.. கவனம்!!!

5 comments
 
அண்மையில் அரபு நாடொன்றில் நடந்த சம்பவம் இது. தனது செல்போனை சார்ச் செய்யப் போட்டுவிட்டு உறங்கப்போன அவருக்கு சிறிது நேரத்தில் சிணுங்கிய செல்போன் எரிச்சலைக் கொடுத்தாலும் எடுத்துக் காதில் வைத்தார். ஆனால் அவர் அதனை சார்ச் செய்வதிலிருந்து கழற்றவில்லை.

சிறிது நேரம்தான் பேசியிருப்பார். திடீரென்று அதிகமாக பாய்ந்த மின்சாரம் அவருக்கு மின்அதிர்வை உண்டுபண்ணியதுடன் செல்போனும் வெடித்து எரியத் தோடங்கிவிட்டது.

எரிந்த படுக்கை


சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குறைவான இதயத்துடிப்புடன் சுயநினைவற்றுக்கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

கையில் தீக்காயம்

செல்போன்  இன்று மிகவும் உபயோகமான சாதனம்தான். ஆனால் அதனால் உயிரைக்கூட எடுக்கமுடியும் பார்த்தீர்களா? ஒருபோதும் சார்ச் செய்யும்போது செல்போனில் பேசாதீர்கள்.

அம்மா எனக்கொரு போதிமரம்!

1 comments
 
மாதங்கள் பத்து மகிழ்வுடனே காத்திருந்து
பாரமென்று பார்க்காமல் பக்குவமாய் எனைத்தாங்கி
நான் கொடுத்த வலியினையும் நன்மையெனப் பொறுத்துக்கொண்டு
ஈன்றெடுத்த என்னம்மா பொறுமையிலே போதிமரம்

பரீட்சைக்கு நான் படிக்க பக்கத்தில் விழித்திருந்து
கண்ணயர்ந்த போதிலெல்லாம் கனிவுடனே காப்பிதந்து
பாசான செய்திகேட்டு என்னைவிட மகிழ்ச்சிகொண்ட
என்னம்மா எனக்கு பாசத்திலே போதிமரம்

தப்பு செய்தால் உடனே தட்டிக் கேட்டுவிட்டு
கண்கலங்கி நான் நிற்க, தானும் சேர்ந்தழுதுவிட்டு
வாரி எடுத்தென்னை வாயாலே திருத்திவிட்ட
வாஞ்ஞையிலே என்னம்மா எனக்கு ஒரு போதிமரம்

மைல்கள் பல கடந்து, தினம்தினம் தொலைபேசி
சின்னக் கவலை மறைத்துச் சிரிப்போடு தினம்பேசி
அங்கிருந்தே எனக்கு அறிவுரைகள் கூறிவிடும்
அறிவினிலே எனக்கு அவர் ஒரு போதிமரம்

அன்னையர் தினத்திற்காய் வாழ்த்தொன்று நான்கூற
‘அடப்போடா’ என்று அப்படியே வெட்கப்பட்டு
சின்னச் சிரிப்பொன்றை எனக்காய்க் கொடுத்துவிட்ட
சிலிர்ப்பினிலே என்னம்மா எனக்கு ஒரு போதிமரம்

Saturday, May 9, 2009

என்னை ஏமாற்றிய தமிழ் சினிமா :-(

2 comments

Lecture கட் அடித்துவிட்டு தியேட்டருக்குப் போன சுபாங்கன்  திரும்பியபின்னும் ஏதோ தன் காதலி வேறொருத்தனுடன் ஓடிப்போன மாதிரிக் கவலையுடன் உட்கார்ந்திருந்தான். தியேட்டர் பாடம் முடித்துவந்த அவனது புத்தகப்பையோ ஒரு பாட்டில் விஸ்கியை ஒரே மிடறில் குடித்தமாதிரி ஒரு மூலையில் சுருண்டு கிடந்தது. இன்னும் எத்தனை பேரைத்தான் இப்படிப்பட்ட படங்களால் ஏமாற்றப்போகிறார்கள் என்று நினைக்க அவனுக்கு எரிச்சல்தான் வந்தது. அந்தப் படத்தில் ஒருசில காட்சிகளைத் தவிர எல்லாமே உண்மைக்குப் புறம்பாக இருந்ததே அவன் கடுப்புக்குக் காரணம்.

இந்த இடத்தில் எந்தப் படத்தில்தான் அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை என அவனை நீங்கள் ஆறுதல்படுத்த நினைத்தால் நீங்கள் உண்மையான தமிழ் சினிமா ரசிகர்தான். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிய ஒன்றுதான் அவனால் பொறுக்க முடியவில்லை.

என்னைப்போல இன்னும் எத்தனை பேரைத்தான் இப்படிப்பட்ட படங்களால் ஏமாற்றப்போகிறார்கள்? திரும்பத் திரும்ப இந்தக் கேள்விதான் அவனைக் குடைந்துகொண்டிருந்தது. அது என்னவென்று அறியுமுன் அவன் Flashback கொஞ்சம் பார்த்தால்தான் உங்களுக்கும் அவன் பிரச்சினை புரியும்.

பல பரீட்சைகளில் மட்டை அடித்தாலும் இறுதிப் பரீட்சையில் எப்படியோ Merritt இல் பாசாகி Campus க்கு தெரிவாகிவிட்டான் சுபாங்கன். அவனுக்கு கம்பஸ் என்றால் எப்படி இருக்கும் என்றெல்லாம் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. சில, பல தமிழ் சினிமாக்களில் பார்த்த College வாழ்க்கை போல மிகவும் மகிழ்ச்சியாக Enjoy செய்யலாம், ஹீரோவைப் போல நாள் முழுக்க ஊர் சுற்றினாலும் இறுதியில் First class இல் பாஸாகலாம் போன்ற பல கனவுகளுடன் Campus இற்குள் காலடி எடுத்து வைத்த அவனுக்குக் கிடைத்ததெல்லாம் இரண்டு மாதத்தில் முடியும் Semester முறையும், இரண்டு நாளில் submit செய்ய வேண்டிய இருபது பக்க Assignment உம்தான். இதெல்லாவற்றையும் விடக் கொடுமையாக Libraryயே கதி என்று கிடந்த Girls அவனது கண்களுக்குத் தட்டுப்படாததால் ஆரம்பத்தில் அது ஆண்கள் மட்டும் படிக்கும் Campus என்றே நினைத்திருந்தான்.

இந்த நிலைமையில்தான் அவனுக்கு ‘தல’ நடித்த(?) ஏகன் படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அவிழ்ந்து விழுவதற்கென்றே சாரி கட்டிய Lecturer நயன்தாராவும், அவரைப்பார்த்து ‘மியாவ்’ என்று கத்தும் மாணவன்  ‘தல’யும், அவனுக்குக் கடுப்பைத்தான் வரவைத்தன. தொப்பையுடன் திரியும் ‘தல’ யைப்போல் அவனது Campus இலும் ஒருசில மாணவர்கள் திரிவதைத்தவிர வேறெந்த ஒற்றுமையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.  கூடவே படத்தில் காட்டியதுபோல ஒரு Campus இல் ப(ந)டித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையும் சேர்ந்து அவனை வாட்டி வதைத்தது.  ஆண்டு ஒன்றில் படித்த வேற்றுமையும் ஒற்றுமையும் பாடம் அப்போதுதான் நன்றாக விளங்குவது போல இருந்தது.

‘தல’ சொன்ன “மியாவ்” அடிக்கடி நினைவுக்கு வந்து தொல்லை கொடுத்தாலும் அடுத்தநாள் அதே Campus க்கு மீண்டும் புறப்பட்டான். “வள்” என்று விழும் Lecturerஐ எண்ணி நடுங்கியவாறே…

Wednesday, May 6, 2009

IPL தோல்வி ஏன்? ஷாருக்கிடம் ஒரு ஜாலி பேட்டி

6 comments
 
IPLல மற்ற எல்லா ரீமுமே எட்டு ஏழு எண்டு போட்டி போட்டுக்கொண்டு இருக்க நம்ம நைட் ரைடர்ஸ் மட்டும் வெறும் மூன்றோட கடைசியா இருக்கு. இதை வச்சே ஆளாளுக்கு காமெடி பண்ணிட்டிருக்கானுங்க. தாதாவுக்குத்தான் சப்போட் எண்டு சைடு பாரில போட்டவங்க எல்லாம் அவரைத் தாத்தா ஆக்கீட்டாங்க. நாமளும் விடுவானேன்? இதோ பேட்டி ஆரம்பம்.
ஷாருக்???

நான் – சார், எனக்கு போட்டி தர சம்மதிச்சதுக்கு முதல்ல நன்றி, முதலாவது…..

ஷாருக் – ஸ்டாப். அது போட்டி இல்லை, பேட்டி. என்ன நீங்க. எனக்கெல்லாம் இப்ப போட்டி என்ற சொல்லைக் கேட்டாலே ஒரு மாதிரியாக் கிடக்குது

நான் – சாரி சார், ஸ்பெலிங் மிஸ்டக். இதையும் ப்ளாக் எழுதுறதுன்னு நினைச்சிட்டேன்.

ஷாருக் – இட்ஸ் ஓகே, கேளுங்க

நான் – சார், உங்க ரீமோட தோல்விக்கு யார் காரணமென்று நினைக்கிறீங்க?

ஷாருக் – முதல் காரணம் இந்த சியர் கேள்ஸ்தான். எங்க ரீமில எல்லாரும் யங் பாய்ஸ். அவங்க மனசு பாதிக்கிற மாதிரி அவங்க ஆடறதால அவங்க கவனம் சிதறிப் போயிடுது. அதுவும் இந்த கங்குலி இருக்காரே, யார் ஆடறதப் பாத்தாலும் நக்மா மாதிரியே இருக்குன்னு நைட்ல புலம்பிட்டிருக்கார். அவங்களும் இல்லாட்டி நாம விளையாடுற மேச்சை யாருமே பாக்க மாட்டாங்க. அதான் என்ன பண்ணுறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.

நான் – உங்க நாலு கேப்டன் ஐடியாவால ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமா இருக்குமா?

ஷாருக் – தெரியல, இருக்கலாம். இப்ப எங்கிட்ட இன்னுமொரு ஐடியா இருக்கு. நாலு ஓனர்ஸ் இருந்தாத்தான் இந்த ரீமை வச்சு தீனி போட முடியும். அப்பறம் கார்க்கி சென்ன மாதிரி நாலு கோச் ஐடியாவையும் யோசிச்சிட்டிருக்கன்.


நான் – நீஙக டீமை விக்கப்போறதா பேசிக்கிட்டாங்களே?

ஷாருக் – சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. நீங்க ஒன்னை முதல்ல நல்லாப் புரிஞ்சுக்கணும். நான் டீமை விக்குறதா இருந்தா அதை வாங்குறதுக்கும் யாராவது இருக்கணுமே. இது நான் நல்லா இருக்கணுமுன்னு நினைக்கிற யாரோ கிளப்பி விடுற வதந்தி.
இப்படி வந்து மாட்டிக்கிட்டமே!

நான் – நீங்க டீமை விட்டுட்டு இந்தியாவுக்கு வந்து பார்ட்டீல ஆட்டம் போட்டதா பேசிக்கிட்டாங்களே?

ஷாருக் – ஆமா, ஆனா அது பார்ட்டிக்காக ஆடல, பார்ட்டீல ரீவீல மேட்ச் பாத்துட்டே இருந்தேன். அப்ப அதிசயமா கங்குலி ஒரு சிக்சர் அடிச்சிட்டார். சியர்கேள்ஸ் கங்குலிதானே எண்டு மேச்சைக் கவனிக்காம இருந்துட்டாங்க. அதான் அங்க நான் ஆடவேண்டியதாப் போச்சு.
சிக்சர்... 

நான் – நடிப்பிலயே இருந்திருக்கலாம் என்று எப்பவாவது பீல் பண்ணியிருக்கிறீங்களா?

ஷாருக் – நீங்க நடிப்பையும் கிரிக்கெட்டையும் பிரிச்சுப் பாக்காதீங்க. நட்சத்திரக் கிரிக்கெட்டில ரித்தீஸ் என்று ஒரு அருமையான நடிகனோட விளையாட்டைப் பார்த்தேன். அடுத்த IPLக்கு அவனையும் ஏலத்தில எடுக்கலாமுன்னு இருக்கேன். அப்புறம் கிரிக்கட் ப்ளயர்ஸ் விளம்பரங்கள்ள என்னமாதிரி நடிக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை நடிப்பும் கிரிக்கெட்டும் ஒன்றோடோன்று பின்னிப் பிணைந்தது.

நான் – திரும்பவும் கங்குலியை கேப்டனாப் போடுற ஐடியா இருக்கா?

ஷாருக் – கேப்டன் பதவியில தலைக்குமேல வேலை இருக்கும். நான் கங்குலி ப்ரீயா விளையாடணுமுன்னு நினைக்கிறன். இந்த நாலு கேப்டன் ஐடியாவும் அதாலதான்.  அதோட இந்த பாரின் ப்ளேயர்ஸ் கணக்கெல்லாம் எனக்குப் பிடிக்கல. கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. இந்திய ப்ளயர்ஸ் இலங்கையில இருக்கிறவங்களுக்கு பாரின் ப்ளயர்ஸ்தானே?
இதத்தான் சொல்றாரோ???

நான் – சரி, இலங்கைப்பிரச்சினையைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?

இந்தக் கேள்விக்கப்புறமும் அவர் பதில் சொல்லிட்டு இருப்பாருன்னு நினைக்கிறீங்க?
Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy