Saturday, May 9, 2009

என்னை ஏமாற்றிய தமிழ் சினிமா :-(



Lecture கட் அடித்துவிட்டு தியேட்டருக்குப் போன சுபாங்கன்  திரும்பியபின்னும் ஏதோ தன் காதலி வேறொருத்தனுடன் ஓடிப்போன மாதிரிக் கவலையுடன் உட்கார்ந்திருந்தான். தியேட்டர் பாடம் முடித்துவந்த அவனது புத்தகப்பையோ ஒரு பாட்டில் விஸ்கியை ஒரே மிடறில் குடித்தமாதிரி ஒரு மூலையில் சுருண்டு கிடந்தது. இன்னும் எத்தனை பேரைத்தான் இப்படிப்பட்ட படங்களால் ஏமாற்றப்போகிறார்கள் என்று நினைக்க அவனுக்கு எரிச்சல்தான் வந்தது. அந்தப் படத்தில் ஒருசில காட்சிகளைத் தவிர எல்லாமே உண்மைக்குப் புறம்பாக இருந்ததே அவன் கடுப்புக்குக் காரணம்.

இந்த இடத்தில் எந்தப் படத்தில்தான் அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை என அவனை நீங்கள் ஆறுதல்படுத்த நினைத்தால் நீங்கள் உண்மையான தமிழ் சினிமா ரசிகர்தான். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிய ஒன்றுதான் அவனால் பொறுக்க முடியவில்லை.

என்னைப்போல இன்னும் எத்தனை பேரைத்தான் இப்படிப்பட்ட படங்களால் ஏமாற்றப்போகிறார்கள்? திரும்பத் திரும்ப இந்தக் கேள்விதான் அவனைக் குடைந்துகொண்டிருந்தது. அது என்னவென்று அறியுமுன் அவன் Flashback கொஞ்சம் பார்த்தால்தான் உங்களுக்கும் அவன் பிரச்சினை புரியும்.

பல பரீட்சைகளில் மட்டை அடித்தாலும் இறுதிப் பரீட்சையில் எப்படியோ Merritt இல் பாசாகி Campus க்கு தெரிவாகிவிட்டான் சுபாங்கன். அவனுக்கு கம்பஸ் என்றால் எப்படி இருக்கும் என்றெல்லாம் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. சில, பல தமிழ் சினிமாக்களில் பார்த்த College வாழ்க்கை போல மிகவும் மகிழ்ச்சியாக Enjoy செய்யலாம், ஹீரோவைப் போல நாள் முழுக்க ஊர் சுற்றினாலும் இறுதியில் First class இல் பாஸாகலாம் போன்ற பல கனவுகளுடன் Campus இற்குள் காலடி எடுத்து வைத்த அவனுக்குக் கிடைத்ததெல்லாம் இரண்டு மாதத்தில் முடியும் Semester முறையும், இரண்டு நாளில் submit செய்ய வேண்டிய இருபது பக்க Assignment உம்தான். இதெல்லாவற்றையும் விடக் கொடுமையாக Libraryயே கதி என்று கிடந்த Girls அவனது கண்களுக்குத் தட்டுப்படாததால் ஆரம்பத்தில் அது ஆண்கள் மட்டும் படிக்கும் Campus என்றே நினைத்திருந்தான்.

இந்த நிலைமையில்தான் அவனுக்கு ‘தல’ நடித்த(?) ஏகன் படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அவிழ்ந்து விழுவதற்கென்றே சாரி கட்டிய Lecturer நயன்தாராவும், அவரைப்பார்த்து ‘மியாவ்’ என்று கத்தும் மாணவன்  ‘தல’யும், அவனுக்குக் கடுப்பைத்தான் வரவைத்தன. தொப்பையுடன் திரியும் ‘தல’ யைப்போல் அவனது Campus இலும் ஒருசில மாணவர்கள் திரிவதைத்தவிர வேறெந்த ஒற்றுமையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.  கூடவே படத்தில் காட்டியதுபோல ஒரு Campus இல் ப(ந)டித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையும் சேர்ந்து அவனை வாட்டி வதைத்தது.  ஆண்டு ஒன்றில் படித்த வேற்றுமையும் ஒற்றுமையும் பாடம் அப்போதுதான் நன்றாக விளங்குவது போல இருந்தது.

‘தல’ சொன்ன “மியாவ்” அடிக்கடி நினைவுக்கு வந்து தொல்லை கொடுத்தாலும் அடுத்தநாள் அதே Campus க்கு மீண்டும் புறப்பட்டான். “வள்” என்று விழும் Lecturerஐ எண்ணி நடுங்கியவாறே…

2 comments:

cherankrish on May 10, 2009 at 10:06 AM said...

தமிழ் சினிமா பல கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது என்று கலைஞர் கருணாநிதி (இப்ப கொலைஞர் என்கிறார்கள்) சொன்னது பொய்யல்ல.தமிழ் படங்களை பார்த்து வெறுத்துப்போயே உலகத்திரைப்படங்களை பார்க்கவும் ரசிக்கவும் தலைப்பட்டவர்கள் அனேகர்.அந்த வகையில் தமிழ் சினிமா நல்ல ரசிகர்களையும் உருவாக்கியிருக்கிறது.அது சரி .. நயன்தாரா அப்படி சேலைகட்டியிருப்பது உங்களுக்கு கசக்கிறதா?

மங்களூர் சிவா on May 10, 2009 at 3:05 PM said...

/
தொப்பையுடன் திரியும் ‘தல’ யைப்போல் அவனது Campus இலும் ஒருசில மாணவர்கள் திரிவதைத்தவிர வேறெந்த ஒற்றுமையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
/

haa haa
ROTFL
:)))))))))

very nice man

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy