Monday, September 28, 2009

பதிவு எழுதிப்பார்!




வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை ஆளாளுக்கு மாற்றி எழுதிப் பதிவிட்டுவிட்டார்கள். நானும் எழுதாவிட்டால் என்னைப் பதிவர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயத்திலேயே இதை எழுதிவிட்டேன். வைரமுத்து மன்னிப்பாராக.










பதிவு எழுதிப்பார்!

திரட்டிகளில் உன்பெயர்
தெளிவாகத் தெரியும்.
உன்தமிழ் அழகாகும்.
உனக்கும் கோபம்வரும்.
இணையம் தெய்வமாகும்
கம்யூட்டர் கோவிலாகும்.
பதிவு எழுதிப்பார்

அதிகம் சிந்திப்பாய்
பார்ப்பதெல்லாம் குறிப்பெடுப்பாய்
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவாய்
பல்துலக்க முன்னேவந்து – உன்
பதிவுகளில் பின்னூட்டம் தேடுவாய்
பதிவு எழுதிப்பார்.

பதிவெழுத வந்துவிட்டால்
மணித்துளிகள் நிமிசமென்பாய்
பின்னூட்டம் வந்திடாத
நிமிசமும் மணிகளென்பாய்
ஒற்றை நிமிடத்தினுள்
ஒன்பதுமுறை ஓட்டுப்பார்ப்பாய்
பதிவு எழுதிப்பார்

மொக்கைப் பதிவுகளுக்கு
முக்கியத்துவம் தருவாய்
சீரியஸ் பதிவென்றால் – கொஞ்சம்
சிந்தித்தே பதிலளிப்பாய்
கும்மி அடிப்பதென்றால்
குதூகலமாய் கிளம்பிடுவாய்
கும்மி உனக்கென்றால் – கொஞ்சம்
ஒதுங்கியே பதுங்கிடுவாய்
பதிவு எழுதிப்பார்

நல்லாய் இருக்குதென்ற
டெம்ளெட் பின்னூடத்திற்கும்
நன்றிசொல்வாய்
அர்த்தமற்ற அனானிக்கும்
ஆறுதலாய்ப் பதிலுரைப்பாய்
அனானியாய் நீயேவந்து
சமயத்தில் பின்னிடுவாய்
பதிவு எழுதிப்பார்.

அனானிகள் வந்து
தாக்கினாலும்
பாலோவர்ஸ் எண்ணிக்கை
படிப்படியாய்க் குறைந்தாலும்
ஒரே பிளாக்கை இருவர்
சிக்கனமாய்ப் பகிர்ந்தாலும்
நீ பின்னூட்டமிடும் அவனோ, அவளோ
உனக்குப் பின்னூட்டமிட மறுத்தாலும்
பதிவு எழுதிப்பார்.

சொர்க்கம், நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்.


பதிவு எழுதிப்பார்.


51 comments:

யோ வொய்ஸ் (யோகா) on September 28, 2009 at 5:09 PM said...

//சொர்க்கம், நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்.//

அப்ப பதிவு எழுதுறது காதலிப்பதற்கு சமனா?

சுபானு on September 28, 2009 at 5:25 PM said...

//அனானிகள் வந்து
தாக்கினாலும்
பாலோவர்ஸ் எண்ணிக்கை
படிப்படியாய்க் குறைந்தாலும்
ஒரே பிளாக்கை இருவர்
சிக்கனமாய்ப் பகிர்ந்தாலும்
நீ பின்னூட்டமிடும் அவனோ, அவளோ
உனக்குப் பின்னூட்டமிட மறுத்தாலும்//

நல்லாயிருக்கு.. வைரமுத்துவின் அதே நடையில் எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..

வேந்தன் on September 28, 2009 at 6:02 PM said...

நல்லா இருக்கு. :)

Sinthu on September 28, 2009 at 6:07 PM said...

எப்படித் தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ? இனிவரும் காலங்களில் எப்படி எல்லாம் எழுதப் போறீங்க..

சவுக்கு on September 28, 2009 at 6:32 PM said...

அருமையா இருக்கு பாஸு. தொடர்ந்து எழுதுங்கள்.

என்றும் அன்புடன் கரன்... on September 28, 2009 at 6:38 PM said...

ம்ம் ... ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு, வைரமுத்து பார்த்த கொஞ்சம் பீல் பண்ணுவார், பட் its ஓகே கரெக்ட் பண்ணீறலாம்

ஆல் தி பெஸ்ட்...

ஆதிரை on September 28, 2009 at 7:56 PM said...

//மொக்கைப் பதிவுகளுக்கு
முக்கியத்துவம் தருவாய்
சீரியஸ் பதிவென்றால் – கொஞ்சம்
சிந்தித்தே பதிலளிப்பாய்//


ம்ம்ம்...
சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். :)

நல்லாயிருக்கு.
உங்கட முப்பாத்தா, நாச்சியம்மா, இளையவல்லி இவர்களையும் பதிவேற்றலாமே... :)

Admin on September 28, 2009 at 7:59 PM said...

கவிதை நன்றாக இருக்கிறது...

அனானிகளை நீங்களும் விடுவதாய் இல்லையா?

ராமலக்ஷ்மி on September 28, 2009 at 8:20 PM said...

நல்லாயிருக்கு:)!

Bavan on September 28, 2009 at 8:56 PM said...

வைரமுத்துவின் குரலில் ஒலிப்பது போல் சிந்தித்து பார்த்தேன் ம்.....

பதிவுகள் பற்றிய பதிவு பிரமாதம் ....

வடுவூர் குமார் on September 28, 2009 at 9:02 PM said...

அருமையாக வந்திருக்கு.

வந்தியத்தேவன் on September 28, 2009 at 10:53 PM said...

பதிவு எழுதிப்பார்
உன் பதிவை இன்னொருவன் சுட்டுத்
தன் பெயரில் வைத்திருப்பான்
அனானியாக வந்து தாக்கியவன்
அதே விடயத்தை தன் பதிவில் எழுதி
எங்கப்பன் இந்தப் பதிவில் இல்லை என்பான்.

சீரியஸ் பதிவு எழுதினாலும் மொக்கை என்பார்கள்
மொக்கை எழுதினால் இது மட்டும் தான் தெரியும் என்பார்கள்
தொடர்பதிவுகளால் அவஸ்தைப் பட்டாலும்
அதனை நாலு பேருக்கு கொடுக்கலாம்

விருதுகள் உன்னைத் தேடிவரவில்லையா?
சுபாங்கன் பாணியின் உனக்கு நீயே விருது கொடுப்பாய்

Subankan on September 28, 2009 at 10:56 PM said...

@ யோகா

//அப்ப பதிவு எழுதுறது காதலிப்பதற்கு சமனா?//

பதிவு எழுதுறதைக் காதலிக்கலாம் தானே?

Subankan on September 28, 2009 at 10:57 PM said...

@ சுபானு

நன்றி, எல்லாம் உங்களைப் பார்த்தபிறகுதான்.

Subankan on September 28, 2009 at 10:57 PM said...

@ வேந்தன்

நன்றி

Subankan on September 28, 2009 at 10:58 PM said...

@ சிந்து

அதுவா வருது. என்ன பண்ண?

Subankan on September 28, 2009 at 10:58 PM said...

@ ஒப்பாரி

நன்றி

Subankan on September 28, 2009 at 11:00 PM said...

// யசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...
ம்ம் ... ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு, வைரமுத்து பார்த்த கொஞ்சம் பீல் பண்ணுவார், பட் its ஓகே கரெக்ட் பண்ணீறலாம்

ஆல் தி பெஸ்ட்...//

நன்றி. அடுத்தவங்க பதிவை மாத்திப் போடறது எவ்வளவு சுகம்..

Subankan on September 28, 2009 at 11:02 PM said...

// ஆதிரை said...
//மொக்கைப் பதிவுகளுக்கு
முக்கியத்துவம் தருவாய்
சீரியஸ் பதிவென்றால் – கொஞ்சம்
சிந்தித்தே பதிலளிப்பாய்//

ம்ம்ம்...
சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். :)
//

இன்னமுமா?

//
நல்லாயிருக்கு.
உங்கட முப்பாத்தா, நாச்சியம்மா, இளையவல்லி இவர்களையும் பதிவேற்றலாமே... :)//

ஆகா, அவங்களை மறக்கவே மாட்டீங்களா?

Subankan on September 28, 2009 at 11:03 PM said...

// சந்ரு said...
கவிதை நன்றாக இருக்கிறது...
//
நன்றி

//
அனானிகளை நீங்களும் விடுவதாய் இல்லையா?//

கொஞ்ச அனியாயமா பண்ணியிருக்காங்க அவங்க?

Subankan on September 28, 2009 at 11:04 PM said...

@ ராமலக்ஷ்மி

நன்றி

Subankan on September 28, 2009 at 11:04 PM said...

@ பவன்

நன்றி

Subankan on September 28, 2009 at 11:05 PM said...

@ வடுவூர் குமார்

நன்றி

Subankan on September 28, 2009 at 11:07 PM said...

// வந்தியத்தேவன் said...
பதிவு எழுதிப்பார்
உன் பதிவை இன்னொருவன் சுட்டுத்
தன் பெயரில் வைத்திருப்பான்
அனானியாக வந்து தாக்கியவன்
அதே விடயத்தை தன் பதிவில் எழுதி
எங்கப்பன் இந்தப் பதிவில் இல்லை என்பான்.

சீரியஸ் பதிவு எழுதினாலும் மொக்கை என்பார்கள்
மொக்கை எழுதினால் இது மட்டும் தான் தெரியும் என்பார்கள்
தொடர்பதிவுகளால் அவஸ்தைப் பட்டாலும்
அதனை நாலு பேருக்கு கொடுக்கலாம்//

எல்லாம் அனுபவமோ?

//விருதுகள் உன்னைத் தேடிவரவில்லையா?
சுபாங்கன் பாணியின் உனக்கு நீயே விருது கொடுப்பாய்//

எல்லாம் புகழும் கலைஞருக்கே!

ARV Loshan on September 29, 2009 at 8:22 AM said...

கலக்கிட்டீங்க சுபாங்கன்.. சபாஷ்..
அத்தனை வரிகளுக்கு உண்மையே..

இடையே வந்து வந்தியும் கவிதையில் வீடு கட்டிட்டார்..

Unknown on September 29, 2009 at 9:06 AM said...

//மொக்கைப் பதிவுகளுக்கு

முக்கியத்துவம் தருவாய்

சீரியஸ் பதிவென்றால் – கொஞ்சம்

சிந்தித்தே பதிலளிப்பாய் //

இப்பிடியே எல்லாரும் இருந்தீங்களென்டா எனக்கு நிறையப் பின்னூட்டம் வரும். ஹிஹிஹி...

வந்தியண்ணா எழுதிய கவிதையும் அசத்தல்.

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி on September 29, 2009 at 9:43 AM said...

நல்லாயிருக்கு..

அன்புடன் மலிக்கா on September 29, 2009 at 11:09 AM said...

அட நல்லாயிருக்குப்பா
சூப்பர்ங்கப்பா

ஜோ.சம்யுக்தா கீர்த்தி on September 29, 2009 at 12:18 PM said...

காதல் செய் நீயும் காதல் செய்
உன் பதிவை நீயே காதல் செய்

அருமை
வாழ்த்துக்கள்

யாரோ ஒருவர் on September 29, 2009 at 2:46 PM said...

என்னங்க எதாற்தங்கள் இங்கு கவிதையாய்! படு சூப்பர்.

RJ Dyena on September 29, 2009 at 10:20 PM said...

EXELLENT.. CONGRATS

ப்ரியமுடன் வசந்த் on September 30, 2009 at 1:36 AM said...

:)))

Subankan on September 30, 2009 at 3:48 PM said...

@ LOSHAN

நன்றி அண்ணா

Subankan on September 30, 2009 at 3:51 PM said...

@ கனககோபி

நன்றி, உங்க பதிவு மொக்கைன்னு யாரு சொன்னது?

Subankan on September 30, 2009 at 3:52 PM said...

@ புலவன் புலிகேசி

நன்றி

Subankan on September 30, 2009 at 3:54 PM said...

// அன்புடன் மலிக்கா said...
அட நல்லாயிருக்குப்பா
சூப்பர்ங்கப்பா//

நன்றிப்பா

Subankan on September 30, 2009 at 3:55 PM said...

@ ஜோ.சம்யுக்தா கீர்த்தி

நன்றி

Subankan on September 30, 2009 at 3:56 PM said...

@ Thirumathi Jaya Seelan

நன்றி

Subankan on September 30, 2009 at 3:58 PM said...

@ டயானா சதா'

நன்றி

Subankan on September 30, 2009 at 3:59 PM said...

@ பிரியமுடன்...வசந்த்

:-)))

Karthik on October 1, 2009 at 2:23 PM said...

கலக்கல்..:))

Kamalnath said...

Hi suba,
Your "பதிவு எழுதிப்பார்!" article is listed in youthful vikatan குட் பிளாக்ஸ் section. Hv a look:
http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

Congrats Suba.

Subankan on October 2, 2009 at 5:12 PM said...

@ Karthik

நன்றி

Subankan on October 2, 2009 at 5:13 PM said...

@ கமல்நாத்

தகவலுக்கு நன்றி

vasu balaji on October 3, 2009 at 1:28 PM said...

வைரமுத்துவே பாராட்டுவார். பிரமாதம்.

யாழினி on October 3, 2009 at 7:06 PM said...

சுபங்கன் நான் சில நாட்களுக்கு முன்னர் "ஒரு பதிவரிடம் (Blogger) காணப்படும் 12 விசேட / பிரத்தியேக‌ அம்சங்கள்" என்ற பெயரில் ஒரு பதிவிட்டேன். இப்பொழுது கிட்டத்தட்ட அதோ கருத்துக்களைக் கொண்ட ஒரு கவிதையைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. :) வாழ்த்துக்கள் சுபங்கன்! :)

Subankan on October 3, 2009 at 9:32 PM said...

@ வானம்பாடிகள்

நன்றி

Subankan on October 3, 2009 at 9:33 PM said...

@ யாழினி

ஆகா, நன்றி

வால்பையன் on October 23, 2009 at 10:18 PM said...

அருமையோ அருமை

Subankan on October 24, 2009 at 10:50 AM said...

@ வால்பையன்

நன்றி

john danushan on February 16, 2011 at 1:03 PM said...

நல்ல பதிவு

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy