Tuesday, October 20, 2009

ஆதவனும் அறுந்த செருப்புகளும்





எந்தப் பிறப்பில் செய்த பாவமோ, பண்டிகை நாட்களில் படம் பார்க்கும் பழக்கம் அண்மைக்காலங்களில் தொற்றிக்கொண்டுவிட்டது. ஆதவன் பார்த்தவர்கள் எழுதியிருந்த விமர்சனங்கள், ஆதவன் பார்க்கப் போவது சொந்த செலவில் சூனியம் வைக்கும் வேலை என்று தெரிந்திருந்தாலும், பேராண்மை திரையிடப்பட்ட ரொக்சி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு, நடு ரேட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு குருவி படம் பார்ப்பது எவ்வளவோ மேல் என்பதால் வேறு வழியின்றி ஆதவனிற்காய் சினிசிட்டிக்கே சென்றேன்.


மதியநேரக் காட்சிக்காய் சென்றிருந்தபோதும், அங்கு நின்றிருந்த கூட்டம் இரவுக்காட்சிவரை இருந்த நான்கு திரையரங்குகளையும் நிரப்பப் போதுமானதாக இருந்தது. எப்படியாவது ஆதவன் பார்த்தே தீருவது என்ற முடிவோடு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானேன்.


அடுத்த காட்சிக்கு டிக்கட் கொடுக்கத் தொடங்கினார்கள். எவ்வளவோ முயன்றும் திரையரங்கிற்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. எனக்கு முன்னால் நின்றிருந்தவர் காலைக்காட்சிக்கு வந்தவராம். அவருக்கும் அதே கதிதான். அதற்கு முதல்நாள் நடந்த விசேட காட்சிக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தும் செல்லாததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.


கொஞ்ச நேரத்தில் போறுமை இழந்த கூட்டம் நமது மூதாதயரின் புத்தியைக் காட்டத் தொடங்கியது. கம்பித் தடுப்புக்களினூடு ஏறிக் குதித்தும், போஸ்டர்களைக் கிழித்தும் அட்டகாசம் செய்யத் தொடங்கியது.  யன்னலைத்திறந்து தியேட்டர் மேலாளர் கத்திய கத்தலும், அதன்பின் கதவை மூடிய வேகமும், விவேக் பாணியில் சொல்வதென்றால் அப்பவே மைல்டா எனக்கொரு டவுட் வரத்தான் செய்தது.



எதிர்பார்த்தது போலவே அடுத்த சில நிமிடங்களில் போலீஸ்காரர் பொல்லுகளுடன் வந்திறங்கினர். எப்படி ஓடினேன் என்று எனக்கே தெரியாது. வீதியின் அடுத்த பக்கத்தில் நின்றிருந்தேன். ஏறத்தாள ஒட்டுமோத்தக் கூட்டமும் ஓடிவிட, கம்பிகளுக்கு மேலே ஏறி வித்தை காட்டிக்கொண்டு இருந்தவர்களுக்கு தமது தீபாவளிப் பரிசுகளைக் கொடுத்துவிட்டு காணாமல் போனது போலீஸ்.


மீண்டும் பழைய குருடி, கதவைத் திறடி கதைதான். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் எல்லாம் பார்க்காமல் வரிசையில் கொஞ்சம் முன்னால் ஒடிச்சென்று நின்றுகொண்டேன்.


அடுத்த காட்சிக்கு டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் முதன்முறையாக தியேட்டரை அண்மித்தேன். போலீஸ் தடியடியின் எச்ச சொச்சங்களாக அறுந்துபோன செருப்புக்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஒரு வழியாக டிக்கெட் கிடைத்தது. படம் பார்த்து முடித்து வெளியே வந்தபோதும் கூட்டம் குறைவில்லை. ஐந்தாறு போலீசார் நிரந்தரமாகவே வெளியில் முகாமிட்டிருந்தனர். செருப்புக்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிந்தது.


பண்டிகை நாட்களில் படம் பார்க்கும் எண்ணத்தையும், கூடவே சூர்யா மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அந்தச் செருப்புகளுடனேயே தூக்கிப்போட்டுவிட்டு வந்து சேர்ந்தேன்.


எனது ஆதவன் விமர்சனத்தைப் படிக்க இங்கே அழுத்துங்கள்.



28 comments:

Unknown on October 20, 2009 at 3:28 PM said...

நான் தான் முதலாவது... ஹி ஹி...

//ரொக்சி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு, நடு ரேட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு குருவி படம் பார்ப்பது எவ்வளவோ மேல் //

என்ன கொடுமையய்யா இது...
எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க...???

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் 'கடைசியா ஒரு மெசேஜ்' சொல்றம் எண்டு சொல்ற மாதிரி நகைச்சுவையா கதைச்சிற்று கடைசில 'பண்டிகை நாட்களில் படம் பார்க்கும் எண்ணத்தையும், கூடவே சூர்யா மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அந்தச் செருப்புகளுடனேயே தூக்கிப்போட்டுவிட்டு வந்து சேர்ந்தேன்' என்று சொன்னது அழகு...
வாழ்த்துக்கள்...

Bavan on October 20, 2009 at 3:29 PM said...

உங்க செருப்பு தப்பிடிச்சா ??:D

Bavan on October 20, 2009 at 3:34 PM said...

//சூர்யா மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அந்தச் செருப்புகளுடனேயே தூக்கிப்போட்டுவிட்டு வந்து சேர்ந்தேன்'//

நல்ல வேளை கனககோபி உங்கள் செருப்பு அறுந்ததால் சூர்யா செருப்பு அடியில் இருந்து தப்பினார் ....

ARV Loshan on October 20, 2009 at 3:38 PM said...

ஹா ஹா.. தேவையா?

//ஆதவன் பார்க்கப் போவது சொந்த செலவில் சூனியம் வைக்கும் வேலை என்று தெரிந்திருந்தாலும், பேராண்மை திரையிடப்பட்ட ரொக்சி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு, நடு ரேட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு குருவி படம் பார்ப்பது எவ்வளவோ மேல் //

அப்படியிருந்தும் எங்கள் சீட்டுகளின் மேலுள்ள நம்பிக்கையினால் நேற்று ரோக்சியிலே பேராண்மை பார்த்தோம்.. ;)


//கூடவே சூர்யா மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அந்தச் செருப்புகளுடனேயே தூக்கிப்போட்டுவிட்டு வந்து சேர்ந்தேன்.
//

இவ்வளவும் சொல்லிட்டு மேலேயே ஆதவன் விளம்பரம்?

செருப்பை ஒரு தரம் கழற்றிப் பார்த்துக்கோங்கோ.. ;)

Unknown on October 20, 2009 at 3:52 PM said...

//Bavan said...
//சூர்யா மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அந்தச் செருப்புகளுடனேயே தூக்கிப்போட்டுவிட்டு வந்து சேர்ந்தேன்'//

நல்ல வேளை கனககோபி உங்கள் செருப்பு அறுந்ததால் சூர்யா செருப்பு அடியில் இருந்து தப்பினார் .... //

நண்பரே...
நல்ல வேளை சுபாங்கன் உங்கள் செருப்பு அறுந்ததால் என்று வரவேண்டும் என நினைக்கிறேன்...
எனக்கும் செருப்பு அறுந்ததற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை...

யோ வொய்ஸ் (யோகா) on October 20, 2009 at 4:04 PM said...

ஏன் வேண்டாத வேலை? நானும் தீபாவளிக்கு ஆதவன் பார்க்க இருந்தேன். கந்தசாமி முதல் சனத்தோடு அடிபட்டு படம் பார்த்த பயம் இருந்தாலும் சூர்யா மேலிருந்த நம்பிக்கைக்கு போகதான் இருந்தேன். வெள்ளியிரவு பேஸ்புக் ஸ்டேடஸ் மேசேஜ்ல படம் பார்த்து பலர் ரொம்ப நொந்த கதை தெரிஞ்சவுடன் படம் பார்க்கிற ஐடியாவ கைவிட்டுட்டேன். இப்ப நான் தப்பிச்சிட்டேனு நினைக்கிறன்.

Bavan on October 20, 2009 at 4:19 PM said...

@ கனககோபி:மன்னிக்கவும் நண்பரே சிறு தவறு நடந்து விட்டது


@ Subankn:நல்ல வேளை subankan உங்கள் செருப்பு அறுந்ததால் சூர்யா செருப்பு அடியில் இருந்து தப்பினார் போலும்..........

வந்தியத்தேவன் on October 20, 2009 at 7:07 PM said...

நல்ல காலம் நான் சினிசிட்டிக்கு வரவில்லை.

//ரொக்சி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு, நடு ரேட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு குருவி படம் பார்ப்பது எவ்வளவோ மேல் //

உண்மைதான் பேராண்மை பார்த்து நொந்துபோனோம்.

சரி சரி இனி வேட்டைக்காரன் தான் முதல் நாள் காட்சி.

வந்தியத்தேவன் on October 20, 2009 at 7:08 PM said...
This comment has been removed by the author.
Subankan on October 20, 2009 at 10:32 PM said...

@ கனககோபி

//நான் தான் முதலாவது... ஹி ஹி.//

எனக்கும் மீ த பஸ்ட் வந்தாச்சு lol

//அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் 'கடைசியா ஒரு மெசேஜ்' சொல்றம் எண்டு சொல்ற மாதிரி//

அந்தக் கறுமமெல்லாம் பாப்பீங்களோ?

நன்றி

Subankan on October 20, 2009 at 10:33 PM said...

@ Bavan

தப்பித்துவிட்டது.

Subankan on October 20, 2009 at 10:36 PM said...

@ LOSHAN

//அப்படியிருந்தும் எங்கள் சீட்டுகளின் மேலுள்ள நம்பிக்கையினால் நேற்று ரோக்சியிலே பேராண்மை பார்த்தோம்.. ;)//

உங்களுக்குத் தைரியம் அதிகம்தான். :p

//இவ்வளவும் சொல்லிட்டு மேலேயே ஆதவன் விளம்பரம்?//

அப்படியே பழகிப்போச்சு

//செருப்பை ஒரு தரம் கழற்றிப் பார்த்துக்கோங்கோ.. ;)//

அடுத்தவங்க கழற்றாட்டிச் சரிதான் ;)

Subankan on October 20, 2009 at 10:37 PM said...

@ யோ வாய்ஸ் (யோகா)

என்ன செய்ய? எல்லாம் நேரம்.

Subankan on October 20, 2009 at 10:38 PM said...

@ Bavan

//நல்ல வேளை subankan உங்கள் செருப்பு அறுந்ததால் சூர்யா செருப்பு அடியில் இருந்து தப்பினார் போலும்.//

எனது செருப்பு அறவில்லை. வேட்டைக்காரனுக்காக அது வெயிட்டிங் lol

Subankan on October 20, 2009 at 10:42 PM said...

@ வந்தியத்தேவன்

//உண்மைதான் பேராண்மை பார்த்து நொந்துபோனோம்.//

அதுக்குத்தான் எங்களை மாதிரி அனுபவஸ்தரிடம் கேட்கவேண்டும் :p

//சரி சரி இனி வேட்டைக்காரன் தான் முதல் நாள் காட்சி//

அந்தமாதிரி விபரீத ஆசையெல்லாம் எனக்கில்லை. பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுங்கள். அதன்பின் பார்க்கலாம்.

Unknown on October 20, 2009 at 11:12 PM said...

///ரொக்சி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு, நடு ரேட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு குருவி படம் பார்ப்பது எவ்வளவோ மேல்///

ஆஹா... கார்க்கி இந்தப்பக்கம் வந்துட்டுப் போங்க சகா... (அது சரி எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்கிறியள்)

Unknown on October 20, 2009 at 11:12 PM said...

///ரொக்சி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு, நடு ரேட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு குருவி படம் பார்ப்பது எவ்வளவோ மேல்///

ஆஹா... கார்க்கி இந்தப்பக்கம் வந்துட்டுப் போங்க சகா... (அது சரி எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்கிறியள்)

Subankan on October 20, 2009 at 11:31 PM said...

@ Kiruthikan Kumarasamy

//ஆஹா... கார்க்கி இந்தப்பக்கம் வந்துட்டுப் போங்க சகா..//

மாட்டி விடுறீங்களா? இருங்க வாறன்.

உண்மைத்தமிழன் on October 20, 2009 at 11:34 PM said...

அங்கேயும் இப்படித்தானா..?

முருகா.. தமிழன் எந்த நாட்டுல இருந்தாலும் திருந்த மாட்டான் போலிருக்கே..!

Subankan on October 20, 2009 at 11:39 PM said...

@ உண்மைத் தமிழன்

//முருகா.. தமிழன் எந்த நாட்டுல இருந்தாலும் திருந்த மாட்டான் போலிருக்கே..!//

ம்.. ரொம்பக் கஸ்டம்.

ஊடகன் on October 21, 2009 at 10:54 AM said...

இன்னும் எதனை நாள் இந்த ஓட்டம்........?

Subankan on October 21, 2009 at 1:07 PM said...

@ ஊடகன்

ஓடுறதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போச்சு. இதெல்லாம் ஒண்டுமே இல்லை

Anonymous said...

இவ்வளவும் சொல்லிட்டு மேலேயே ஆதவன் விளம்பரம்?

Subankan on October 21, 2009 at 1:38 PM said...

@ piraveenaa

எல்லாம் விளம்பர தந்திரம்தான்.

Karthikeyan G on October 21, 2009 at 2:07 PM said...

WoW..Pleasant experience for a classical movie. :)

Subankan on October 21, 2009 at 4:44 PM said...

@ Karthikeyan G

:-)))

புல்லட் on October 22, 2009 at 5:03 PM said...

உதையெல்லாம் ஒரு பன்னா எடுத்துக்கணும் தம்பி..
டென்சன் ஆகப்படாது..;-)

Subankan on October 22, 2009 at 9:35 PM said...

@ புல்லட்

வீட்ட வந்து நினைச்சசுப்பாத்தா பன்னுதான். நடக்கறப்பதான் ரணகளமாஇருக்கும்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy